உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

பாலம் கட்ட தோண்டப்பட்ட மண்ணை மழைநீர் ஓடையில் கொட்டிய அவலம்


நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே பாலம் கட்ட தோண்டப்பட்ட  மண்ணை ஓடையின் நடுவே கொட்டியதால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது.

                    பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தோண்டப்பட்ட மண் முழுவதையும் பணியின் போது ஓடையில் மழை நீர் வந்து வேலை செய்ய இடையூறு ஏற்படுத்தாதவாறு அப்பகுதியில் உள்ள தெற்கு தெருவிற்கு செல் லும் வழியில் உள்ள சிறிய உயர் மட்ட பாலத்தின் அருகில் கொட்டினர். தற்போது பணி முடிவடைந்து பாலம் திறப்பு விழா நடத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஓடையில் கொட்டப்பட்ட மண் முழுவதும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர்.

                    இதனால் மழைக் காலங்களில் ஓடையில் ஓடும் தண்ணீர் வழியின்றி தேங்கும் நிலையும், தண்ணீர் அதிகரிக்கும் நிலையில் கரையையொட்டியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் உட்புகும். அதுமட்டுமின்றி புதிய உயர்மட்ட பாலத்தின் ஏழு கால்வாய்களில் ஐந்து கால்வாய்கள் மூடியுள்ளதால் இரண்டு கால்வாய் வழியாகத்தான் நீர் ஓடக் கூடிய நிலை உள்ளது. இதனால் பாலம் குறுகிய  காலத்தில் பாழடையும் நிலை உள்ளது. சி.என்.பாளையம் தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். நடுவீரப்பட்டு பகுதியில் தடுப்பு சுவர் சிறிய அளவிற்கு மட்டுமே கட்டியுள்ளனர். இதனால் மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்படும். எனவே, கிராம சாலைகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு ஓடையில் உள்ள மண் முழுவதையும் அகற்றவும், தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டி அருகே 68 சவரன் நகை திருட்டு: ஆசாமிகளுக்கு வலை


பண்ருட்டி: 

                         பண்ருட்டி அருகே 68 சவரன் தங்க நகை திருடு போனது குறித்து எஸ்.பி. அஸ்வின்கோட்னீஸ் விசாரணை நடத்தினார். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (49). கடந்த 25ம் தேதி இவரது  வீட்டில் பீரோவில் இருந்த 68 சவரன் தங்க நகை , ஒன் னரை லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் மணவாளன், சப் இன்ஸ் பெக்டர் சுப்பையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சேத்தியாத்தோப்பில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்


சேத்தியாத்தோப்பு: 

                   சேத்தியாத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சக்தி செங்குட்டுவன். இவருக்கு சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் சொந்தமான வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக செங்குட்டுவன் சிதம்பரத்திற்கும் இவரது மனைவியும் வடலூர் சென்றிருந்தனர். செங்குட்டுவன் தாய் மட்டும் வீட்டில் இருந்தார்.

                     இரவு 8 மணிக்கு திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக  வீசியதால் அருகில் இருந்த வேப்பமரம், தென்னை மரத்திலும் தீ பிடித்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பீரோக்கள், கட்டில், மெத்தை, தானியங்கள், 'டிவி' உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior