உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

நல்லூர் ஒன்றியத்தில் விவசாயிகள் சுற்றுலா


சிறுபாக்கம்: 

                     நல்லூர் ஒன்றிய தோட்டக்கலை மற் றும் வேளாண்மை வளர்ச்சித்துறை சார் பில் விவசாயிகள் சுற்றுலா சென்றனர்.

                   இதில் தோட்டக்கலை சார்பில் மரவள்ளி சாகுபடி செய்யும் 40 விவசாயிகள் தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், கோயம்புத்தூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், மற்றொரு குழு வேளாண்மை வளர்ச்சி குறித்து தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இரு வாகனங்களில் சென்றனர். இவர்களை வேளாண்மைக்குழு தலைவர் பாவாடைகோவிந்தசாமி வழியனுப்பி வைத்தார். உடன் சேர்மன் ஜெயசித்ரா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமணன், உதவி வேளாண் அலுவலர்கள் கங்கைமணி, முத்துராமன், பெரியசாமி, கவுன்சிலர்கள் சக்தி விநாயகம், வெங்கடாசலம், மோகன் ராஜ் உட்பட பலர் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கள்ளநோட்டு கண்டுபிடிப்பு விழிப்புணர்வு


சிதம்பரம்: 

                   சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப் பட்டது. சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், செந்தில் ஞானவேல் சிட் பண்ட்ஸ் இணைந்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் கோவிந் தராஜன், சிட்பண்ட்ஸ் நிர்வாகி சீனிவாசன், சங்க செயலாளர் மாதவன் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 கடலூர்: 

                        எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்தியாவசிய பொருட் கள் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு,  பொது வினியோகத் திட்டத்தை பலப்படுத்த கோரியும் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய 'பந்த்' நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கடலூர் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் சுகுமாறன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாறன் கோரிக்கை களை விளக்கி பேசினார். வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன் மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து பேசினார். மனோகரன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior