உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

கலப்பட டீத்தூள் விற்பனை சுகாதாரத்துறையினர் பறிமுதல்


குறிஞ்சிப்பாடி : 

               வடலூரில் டீத்தூளில், முந்திரி கொட்டைத் தோலை கலப்படம் செய்து விற்று வந்ததை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

           வடலூர் கோட்டைக்கரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் கலியபெருமாள். இவர் டீத்தூளில் முந்திரி கொட்டைத் தூள் கலந்து விற்பனை செய்வதாக சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவர் லட்சுமி சீனுவாசன், துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஜானகிராமன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

                 ஆய்வில் முந்திரிகொட்டைத் தூளை டீத்தூளில் கலப்படம் செய்து பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் 400 கிலோ கலப்பட டீத்தூள், பேக்கேஜ் மிஷின், எடை இயந்திரம், போலி டீத்தூள் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த டீத்தூள்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் இருக்கும். இதுபோன்ற டீத்தூள்கள் சாப்பிட்டால் தலைவலி மற்றும் புற்றுநோய் வரும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

பொது அறிவிற்கு:

தாவர வைரஸ்களில் காணப்படுவது - ஆர்.என்.ஏ.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அனாதையாக கிடந்த பெண் குழந்தை : தீயணைப்பு படையினர் மீட்பு


நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் முட்புதரில் அனாதையாக கிடந்த பெண்குழந்தையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

            நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு முனியன் ஓடை வழியே அண்ணா நகரை சேர்ந்த பிரேமானந்தா, தமிழ்வாணன் நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது 15 நாள் வயதுடைய பெண் குழந்தை அனாதையாக அழுது கொண்டிருந்தது.

               அக்கம்பக்கம் குழந்தையின் பெற்றோர் இருக்கிறார்களா என தேடிபார்த்தும் யாரும் இல்லாததால் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர். நெல்லிக்குப்பம் போலீசார் குழந்தையை பெற்று அவசர ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை போட்டுவிட்டு சென்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொது அறிவிற்கு:

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குறிஞ்சிப்பாடியில் முற்றுகை போராட்டம்


குறிஞ்சிப்பாடி : 

              குறிஞ்சிப்பாடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

               தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டைக் கண்டித்து விவசாய சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு வட்ட பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துரைராஜ், மணிகண்டன் உரையாற்றினர். முற்றுகை போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி மின் வாரிய வாயிலை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 20 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.


பொது அறிவிற்கு:

   பூக்கும் தாவரத்தின் பெயர் - பெனரோ கேம்கள்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior