உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

இலவச எலும்பு தேய்வு கண்டறியும் முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச எலும்பு தேய்வு கண்டறியும் முகாம் நடந்தது.

              சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் கண்ணா ஆர்த்தோ கிளினிக் இணைந்து நடத்திய முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங் கினார். ரோட்டரி கவர்னர் அருள் மொழிச்செல்வன் துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில் எலும்பு எடை அடர்த்தி சோதிக்கப் பட்டது. இதனால் எலும்பு தேய்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனையை டாக்டர் பாரதி செல்வன் வழங்கினார். முன்னாள் ரோட்டரி தலைவர்கள் மகபூப் உசேன், நடராஜன், ராமகிருஷ் ணன், பாபு, முகமது யாசின், சீனிவாசன், தலைவர் தேர்வு செந்தில் உள்ளிட்டவர்க ள் பங்கேற்றனர். சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்.

பொது அறிவிற்கு:
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகம் - வியாழன்

Read more »

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கடலூர் : 

              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது.

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 9 மற் றும் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது. தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஆண்டிற்கான பாட புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு மறு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
காற்றில்லாத கிரகம் - புதன்

Read more »

மின்வெட்டை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

 சிதம்பரம் : 

             சிதம்பரத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டை கண்டித்தும், விவசாயிகள், பொது மக்களுக்கு தங்குதடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாய சங்கத்தின் சார் பில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்டதுணைத் தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். கண்ணங்குடி ஊராட்சித் தலைவர் ராஜசேகர்,விவசாய சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள்,சிதம்பரம் நகர செயலாளர் ஜின்னா, இந்திய வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் வாஞ் சிநாதன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் குணசேகரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

பொது அறிவிற்கு:
சூடான கிரகம் - புதன்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior