உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் நடத்திய புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம்

கிள்ளை : 

              சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் சார்பில் புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

               சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில் சிதம் பரம் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கத்தின் மூலம் நடந்த புவி வெப்பம் அடைதல் குறித்த கருத்தரங்கில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்றார். இயக்கத் தலைவர் குபேரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர்களை தடுக்கும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, அக்னி சிறகுகள் எழுச்சி இயக்கத்தினர்கள் மணிமாறன், மணிகண்டன், சுப்ரமணியசிவா, விஜயராஜ், வேம்பரசி, யவனராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை குணவதி, பபிதா உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர். கவிதா நன்றி கூறினார். முகாமில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பொது அறிவிற்கு
மனிதன் நிலவில் இறங்கிய நாள் - ஜூலை 21, 1969


Read more »

ஒரு ஆண்டு தொங்கிய கம்பி ஒரே நாளில் சீரமைப்

சிதம்பரம் : 

          தொட்டு விடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தாழ்வாக தொங்கிய மின் கம்பி தினமலர் செய்தி எதிரொலியால் ஒரே நாளில் சரி செய்யப்பட்டது.

            சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தில் வயல்வெளி வழியாக செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தொங்கியது. இதனால் வயல்வெளிக்கு செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வந்தனர்.  செயற் பொறியாளர் செல்வசேகர் அதிரடி நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் புதிய மின் கம்பம் நடப்பட்டு, தாழ்வாக இருந்து மின் கம்பி சரி செய்யப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொது அறிவிற்கு:
நிலவின் விட்டம் - 3475 கி.மீ.

Read more »

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் காரீப் முன் பருவ பயிற்சி

குறிஞ்சிப்பாடி :

            குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காரீப் முன் பருவ பயிற்சி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

              குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் கோடையுழவு, மண் மாதிரியின் அவசியம், விதை நேர்த்தி, எலி ஒழிப்பு, செம்மை நெல் சாகுபடி குறித்து காரீப் முன் பருவ பயிற்சி முகாம் கடந்த 26ம் தேதி தொடங்கி வரும் மே 13ம் தேதி வரை அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாலை 4 மணிக்கு வேளாண்மை துறை அலுவலர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

               இந்த பயிற்சி முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதுடன் தங்கள் நிலத்தின் மண் சத்துக்களை அறிந்து கொள்ள மண் மாதிரி எடுத்து வந்து ஆய்வு செய்து இதன் அடிப்படையில் நிலத்துக்கு தேவையான உரங்களை இட்டு அதிக விளைச்சலை பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒரு மண்மாதிரி ஆய்வு செய்ய 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொது அறிவிற்கு:
சூரிய மண்டலத்தின் சிறிய கிரகம் - புளுட்டோ

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior