உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அண்ணா விளையாட்டரங்கில் ஆணைய உறுப்பினர் செயலர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சத்ய பிரதா சாகூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

              ஆய்வின் போது நீச்சல் குளம், தடகள வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பங்களிப்பு, ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் ஹெலிபேடு, குவாஷ் அரங்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். குவாஷ் அரங்கு, ஷட்டில்காக் புதிதாக அமைக்கப்பட்ட அரங்குகளை விரைவில் திறக்க உத்தரவிட்டார். ஷட்டில்காக், வாலிபால், ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட் டவைகளுக்கு பயிற்சியாளர்களை நியமிக்கவும், புதிய ஓடுதளம் அமைக்கவும் ஆவன செய்வதாக கூறினார்.

                மாதம் தோறும் தடகள போட்டிகள் நடத்தி வீரர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தினார். ஸ்கேட்டிங் பயிற்சி பெற வசதியாக இடத்தை மேலும், மென்மையாக்க, கலெக்டரிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ஆய்வின் போது மண்டல முதுநிலை மேலாளர் தியோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்சியாளர் அருணா ஆகியோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி அரங்கை பார்வையிட சென்றார்.

பொது அறிவிற்கு:

நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் - 1.3 நொடி

Read more »

போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க எஸ்.பி., உத்தரவு


சிதம்பரம் : 

             கடலூர் மாவட்ட போலீசார் ஒழுக் கத்தை கடைபிடிக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

             போலீசார் பல இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எஸ்.பி., க்கு புகார்கள் வந்துள்ளது. சிதம்பரத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு பாதுகாப்புக்கு வந்த கடலூர் ஆயுதப்படை போலீசார், வாகனத்திற்கு வழிவிடாத இரு கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு ஒருவரை தாக்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் இரவு ரோந்து செல்வதில்லை, குடிபோதையில் டியூட்டி பார்ப்பது போன்ற தகவல்களும் எஸ்.பி., கவனத்திற்கு வந்தது.

               போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால் கடுப்பான எஸ்.பி., போலீசார் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க கட்டளையிட்டுள்ளார். வாரம்தோறும் ஒவ்வொரு போலீஸ் உட்கோட்ட தலையிடத்தில் 'கவாத்து' பயிற்சி கட்டாயம் நடத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகள் முதல் போலீசார் வரை கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு வராத போலீசார், அதிகாரிகள் உடனடியாக கடலூர் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்படுவார்கள். 'கவாத்து' பயிற்சியின் போது, உட்கோட்ட அதிகாரி அறிவுரை வழங்குவதுடன் ஏற்கனவே செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, கண்டிக்க வேண்டும் போன்ற கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எஸ்.பி.,யின் இந்த அதிரடி உத்தரவால் மாவட்ட போலீசார் கதிகலங்கி உள்ளனர்.

பொது அறிவிற்கு
கண்ணால் பார்க்க கூடிய கிரகம் - செவ்வாய்

Read more »

விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

சிறுபாக்கம் : 

             மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார அளவில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

               மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராசு, செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் டென்சிங் வரவேற்றார். மங்களூர் கால்நடை மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், வேளாண் அலுவலர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராசு, விவசாயிகள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

               கூட்டத்தில் வேளாண் மானிய திட்டத்தில் இடுபொருட்கள், கருவிகள், பூச்சி மருந்துகள், விதைகள் குறித்து தகவல் பலகை வைக்கவும், சிவப்பு சந்தனம் பயிரிட கன்றுகள் அரசு அங்கீகரிக் கப்பட்ட, அரசு சார்ந்த மற்றும் தனியார் பண்ணைகளில் மரக் கன்றுகளை ரசீதுடன் பெற்று வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மானியம் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம், சிங் சல்பேட், வேர்க்கடலை பயிர்களுக்கு நுண்ணூட்ட உரக் கலவை அடங்கிய 5 கிலோ மினி கிட் உள்ளிட் டவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொது அறிவிற்கு:
சிவப்பு கிரகம் என அழைக்கப்படுவது - செவ்வாய்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior