உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிலாளர் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


கடலூர்: 

                தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
            தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நேற்று கடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடந்தது. மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெரால்டு வரவேற் றார். துணைத்தலைவர்கள் பிரான்சிஸ் சேவியர், சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும். வாரிய மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள சிக்கலை நீக்க வேண்டும். அனைத்து பதவிகளிலும் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும். கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சட் டம் சீரிய முறையில் அமல் படுத்திட புதிய கட்டமைப்பு உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி சமாஜ்வாடி மாணவர் பிரிவு கோரிக்கை

புவனகிரி: 

            கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என சமாஜ்வாடி மாவட்ட மாணவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
                   தமிழக சமாஜ்வாடி கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். அருண்குமார், ஜெயகாந்தன், ராமலிங்கம், செந்தில் குமார், சீனுவாசன், ஜெயக் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேரவை செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். கட்சியின் மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ் பேசினார்.  

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

                  கடலூர் மாவட்டத்தில் சட்ட கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும். அரசு நிர்ணய கட்டணத் திற்கு மாறாக நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி முகாம் நிறைவு

கடலூர்: 

                     ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டரங்கு மற்றும் சில்வர் பீச்சில் நடந்தது. இதில் 44 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று முன் தினம் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. அமைச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம் முன்னிலை வகித்தார். கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக் கங்களை வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கருணாகரன், செயற்குழு உறுப்பினர் வாசு, ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், செயலா ளர் சந்திரமோகன் பால் ராஜ், பயிற்சியாளர்கள் அமரேந்திர பிஷ்வால், வெங்கடேஷ், நிர்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior