உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

கடலூரில் எம்.எச்.ஓ., பணியிடம் காலி: சுகாதாரப்பணிகள் மந்தம்

கடலூர்: 

                      கடலூர் நகராட்சி சுகாதார அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதால் கடலூரில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்தவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ளதால். சுகாதார அதிகாரியின் கீழ் இயங்கும் நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது தமிழகம் முழுவதும் போலியான உணவு பொருட்கள், காலாவதியான உணவு பண்டங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த பணி அடிக்கடி நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடலூர் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், சைவ, அசைவ ஓட்டல்கள் அதிகம் இருந்தும் இரண்டு நாட்களில் பெயரளவிற்கு ஆய்வு நடத்தப்பட்டு, 60 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக காலாவதி உணவு பொருட்கள் அழிக்கப்பட்டது .தற்போது பள்ளி சேர்க்கை நேரம் என்பதால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டிய சுகாதார அதிகாரி இல்லாததால், சான்றிதழ் பெருவதில் காலதாமதம் ஏற்பட் டுகிறது. மேலும் சுகாதா ரம் தொடர்பான பல பணிகள் ஆய்வு செய்ய அதிகாரி இல்லாததால் பணிகள் மந்தமாக நடக்கிறது.

Read more »

நெய்வேலி சுரங்கத்தில் வெளியேறும் தண்ணீரைஅரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்ப கோரிக்கை

பரங்கிப்பேட்டை

               நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்பிவிட கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றியம், அரியகோஷ்டி ஊராட்சி தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:
 
                     நெய்வேலியில் விஸ்தரிப்பு செய்யப்படும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெறியேற் றப்படும் தண்ணீரை கம் மாபுரம், சாத்தப்பாடி வழியாக அரியகோஷ்டி கடைமடை வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்கு திருப்பி அனுப்ப வேண் டும். அப்படி செய்தால் புவனகிரி, தம்பிக்குநல் லாண்பட்டினம், ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, தீர்த் தாம்பாளையம், பு.முட்லூர், சின்னகுமட்டி, சம்பந்தம், ஆணையாங்குப்பம், அரியகோஷ்டி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

                தற்போது வீராணம் ஏரி பாசனத்தை நம்பி ஒரு போகம் மட்டுமே பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் நெல் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வீணாக செல்லும் நெய்வேலி சுரங்க தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்கால் பகுதி விவசாயிகள் பயன்படுத்தினால் அந்த பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகளும், ஏழை விவசாய கூலி தொழிலாளர்களும் வறுமையில்லாமல் வாழ்வார்கள். அதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்

பரங்கிப்பேட்டை: 

             பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மருத்துவமனையில் முதல் மாடியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டுகளில் கழிவுநீர் குழாய் மூலம் கீழே உள்ள செப்டிக் டேங்கிற்கு செல்ல வேண்டும். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மாடியில் இருந்து குழாய் வழியாக வரும் கழிவுநீர் உடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை பின்புறம் உள்ள நெல்லுக்கடை தெரு வழியாக கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதை தடுக்க சமமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior