உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர் : 

                  கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் தாழங்குடா அருகே உள்ள பெண்ணையாற்றை ஒட்டியுள்ள உப்பனாறு அருகே நேற்று மதியம் லாரி ஒன்று மணலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதியினர் உதவச் சென்றபோது, உப்பனாற்றில் இருந்து அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார் தட்சணாமூர்த்தி, வி.ஏ.ஓ., பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று அனுமதியின்றி கிளஞ்சல் ஏற்றி நின்ற லாரியை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

விருத்தாசலம் : 

              விருத்தாசலத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்து தரக்கோரி வாசகர் வட்டம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதுகுறித்து அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
                   விருத்தாசலம் அரசு கிளை நூலகம் 30 ஆண்டிற்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்போடு பல இடங்கள் தேர்வு செய்த போதிலும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இறுதியாக காட்டுகூடலூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலோடு தயாரான ஆவணங்கள் சி.இ.ஓ., வின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பள்ளிக்குரிய இடத்தை நூலக கட்டடம் கட்ட தர வேண்டாம் என கல்விதுறை இயக்குனர் அறிவுறுத்தியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே புதிய நூலகம் கட்டுவதற்கு அரசே இடத்தை தேர்வு செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி வாசகர் வட்டம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்ட தேதி வாசகர் வட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டியில் பாக்கெட் சாராய விற்பனை "படுஜோர்'

பண்ருட்டி : 

                பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி சித்திரைச்சாவடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் அருகில் பாக்கெட் சாராய விற் பனை படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் அதிரடி நடவடிக்கையால் பல இடங்களில் பாக்கெட் சாராய விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஆனால் இங்குள்ள சாராய வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவியில் இருந்து தினமும் பாக்கெட் சாராயத்தை "பர்சேஸ்' செய்து மோட்டார் பைக் மற்றும் பஸ்களில் கொண்டு வந்து இப்பகுதியில் விற்பனை செய்கின்றனர். நீண்ட நாட்களாக சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior