உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும்: எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் : 

                அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண் டும் என திருமண உதவி தொகை வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங் கும் விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் நவநீதம் சாமுவேல், இளங்கோ, சமூக நல அலுவலக கண் காணிப்பளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 69 பேருக்கு தலா 20 ஆயிரம் வீதம் 13.80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:

                      மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற் போது 25 ஆயிரம் ரூபாயாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தற்போது பணம் பெற வந்துள்ள பயனாளிகள் 6 மாதத்திற்கு முன் விண்ணபித்திருந்ததால் இவர்களுக்கு பழையத் தொகையான 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. திருமணத்திற்காக சிரமப்படும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கொண்டு வந்த இந்த திட்டத்திற்காக நிதி உதவி வழங்குவதை பெருமையாக கருதுகிறோம். கடலூர் பகுதியில் சாலைகள், பாலங்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்த பலர் செயல்படுத்த முடியாத திட்டங்களை முதல்வர் கருணாநிதி ஏழைகளின் நிலை அறிந்து பல்வேறு இலவச திட்டங்களையும், மாணவர்களுக்கு கல்வி முதல், "கான்கிரீட்' வீடுகள் திட்டம் வரை நிறைவேற்றி வருகிறார். அரசு செய்து வரும் உதவியை மறக்காமல் முதல்வர் கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

Read more »

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு: டி.ஆர்.ஓ., தகவல்

சிதம்பரம் : 

                         சிதம்பரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., நடராஜன் வழங்கினார். சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் ஆகிய 6 குறுவட்டங்களுக் கான ஜமாபந்தி கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஜமாபந்தி இறுதி நாளான நேற்று முன்தினம் வரை 2,309 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 396 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. 1,824 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 89 மனுக்கள் தள் ளுபடி செய்யப்பட்டது.நிறைவு விழாவிற்கு தாசில்தார் காமராஜ் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராமராஜ் முன் னிலை வகித்தார். விழாவில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி டி.ஆர்.ஓ., நடராஜன் பேசுகையில், "பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் விவரம் முதல் முறையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டு வரும் 22ம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படும்' என தெரிவித்தார்.

Read more »

'மது' அருந்தும் இடமாக மாறும் அண்ணா விளையாட்டரங்கம்

கடலூர் : 

                            கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மதில் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமுக விரோதிகள் அமர்ந்து மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் விளையாட்டு வீரர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைத்துள்ளதை மறுக்க முடியாது.
 
                    இங்கு கால் பந்து, கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ், நீச்சல் குளம், பிற மாவட்டங்களில் இல்லாத அளவில் குவாஷ் அரங்கம் மற்றும் தடகள போட்டிகளுக்கு ஏற்ப ஓடுதளங்கள், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கான தனியாக நடை பாதை என அனைத்து வசதிகளும் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற பலர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட விளையாட்டரங்கம் தற்போது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அரங்கை சுற்றியுள்ள மதில் சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனை ஒருவரும் கண்டு கொள்ளாததால் இரவில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து நடைபாதை விளக்குகள் மற்றும் ஒயர்களை திருடிச்செல்வது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி பாதையில் அமர்ந்து மது அருந்துவதும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior