உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சிதம்பரத்தில் இடி தாக்கி மாடு பலி

சிதம்பரம் : 

                     சிதம்பரத்தில் இடி தாக்கியதில் பசுமாடு தீயில் கருகி இறந்தது.சிதம்பரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் பலத்த டி இடித்தது. அப்போது சிதம்பரம் இளைமையாக்கினார்கோவில் தெரு அலமேலு என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்தில் மாடு கருகி இறந்தது.இந்த திடீர் விபத்தில் இறந்த மாட்டின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

Read more »

ஆட்டோ டிரைவர்கள், பழக்கடைக்காரர்கள் மோதல் பண்ருட்டியில் 10 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன

பண்ருட்டி : 

                    பண்ருட்டியில் ஆட்டோ டிவைர்கள், பழக்கடையினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்து பழக்கடைகள் அடித்து நெறுக்கப்பட்டன. பண்ருட்டி காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்பவர் ராமதாஸ். இவர் மகன் செல்வகணபதி(22). இவர் நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு ஆட்டோ சங்க தலைவர் கந்தசாமி ஆட்டோவில் வந்த பயணி ஒருவருக்காக செல்வ கணபதியிடம் 120 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு, 70 ரூபாய் கொடுத்தார். மீதம் 50 ரூபாயை தரவில்லை.

                        பழக்கடையில் வேலை செய்த பரணி என்பவர், கந்தசாமியிடம் மீதி பணத்தை வாங்கி கொடுத்துவிட்டு ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வகணபதி மற்றும் அருகில் இருந்த பழக்கடை ஊழியர்கள் சேர்ந்து கந்தசாமியை தாக்கினர். அதில் காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                  இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பழக்கடைகளை அடித்து நொறுக்கினர். டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் தவமணி, பச்சையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இதில் ஆறு பழக்கடைகள், இரண்டு அரிசி கடைகள் உட்பட 10 கடைகள் சேதமடைந்தன.

                     போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர்கள் திருவள்ளுவர் நகர் குமார்(35), அம்பேத்கர் நகர் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார்(32) மற்றும் பழக்கடையைச் சேர்ந்த சரவணன்(40), அப்பாதுரை(24), செல்வகணபதி(22) உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

பயணிகள் சென்ற காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவரிடம் போலீஸ் விசாரணை

பண்ருட்டி : 

                    மகாபலிபுரம் செல்ல டிராவல்ஸ் காரில் வந்த குடும்பத்தினரை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட் டது.

                    காரைக்கால் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ஹாதி(50). இவர் சென்னை மண்ணடியில் உள்ள தங்கை ஜகரின்னிசா(44) வீட்டிற்கு குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு மண்ணடியில் இருந்து மகாபலிபுரம் அருகில் உள்ள எம்.ஜி.எம். செல்வதற்காக அப்துல்ஹாதியின் மனைவி ஜீனத் துள்(45), மகள்கள் நஜீராபிரதோஷ் (12), நபிஷாபிரதோஷ்(10), மகன் நஜீம் உசேன்(8), தங்கை ஜகரின் னிசா (44), ஹனீஸ்பாத்திமா(17) ஆகிய ஆறு பேர் மண்ணடியில் உள்ள பாத்திமா டிராவல்ஸ் டாடா சுமோவை வாடகைக்கு அமர்த்தி புறப்பட்டனர்.

                  பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் முகமதுரபீக்(28) சுமோவை ஓட்டி வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மகாபலிபுரம் எம்.ஜி.எம்., பகுதிக்கு செல்லாமல் செங்கல்பட்டு வழியாக திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். இது குறித்து காரில் பயணம் செய்தவர்கள் டிரைவரிடம் கேட்டனர். டிராவல்ஸ் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய டிரைவர் முகமதுரபீக், காரை மோதி விபத்து ஏற்படுத்தப்போவதாக கூறி தாறுமாறாக ஓட்டினார்.

                      இதனால் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டு டிராவல்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்தனர். சினிமாவில் வருவது போல் சம்பவம் நடந்ததால் டிராவல்ஸ் உரிமையாளர் ஜாபர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சுமோ கார் விக்கிரவாண்டி டோல்கேட் ஸ்பீட் பிரேக் அருகில் வந்த போது சுமோவில் வந்த ஹனீஸ்பாத்திமா, நஜீராபிரதோஷ், நபீஷா பிரதோஷ் ஆகிய மூவரும் பின்கதவை திறந்து குதித்தனர். பண்ருட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் பண்ருட்டி ரயில்வே கேட் அருகில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து சுமோ கார் டிரைவர் முகமது ரபீக்கை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சுமோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior