உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆத்ம திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் : 

                            சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை மூலம் ஆத்மத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

                                சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வேளாண் துறை மூலம் ஆத்ம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால் நடை, மீன்வளம், வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆத்ம திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அலுவலர்கள் ரமேஷ், குப்புசாமி, பி.டி.ஓ.,ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதியஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

சிதம்பரம் : 

                      பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அகில இந்திய பிற்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா வழங்கினார். சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் சேர்க்கை தீரவிரமாக நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட சிதம்பரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி ஒன்றியங்கள், சிதம்பரம் நகரம், அண்ணா மலை நகர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதிய உறுப்பினர்களுக்கு அகில இந்திய பிற் பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

                  நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், தொழிற்சங்க செயலாளர் கோதண்ட பாணி, ரவி, சிவக்குமார், பாலு, ரமேஷ், சந்தோஷ்குமார், ராஜா, சரவணன், அப்துல் லத்தீப், ராமு உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். ஜூலை 31ம் தேதி உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துக் கொண்டு ஆகஸ்ட்10ம் தேதி மாநில தேர்தல் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து

கடலூர் : 

                      கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண்கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள் மற்றும் இரும்புகள் கடந்த 7ம் தேதி ஏலம் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடந்தது.

                        அதில் அலுவலக கட்டடத்தில் உள்ள மரங்கள் மற்றும் இரும்புகளுக்கு அரசு 14 லட்சத்து 21 ஆயிரத்து 180 ரூபாய் நிர்ணயம் செய்தது. இந்த டெண்டரை விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் என்பவர் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கு எடுத்தார். இதற்கான தொகையை 24 மணி நேரத்தில் அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைப்படி நேற்று மாலை 4 மணிவரை டெண்டர் எடுத்த தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக விடப்பட்ட டெண் டர் ரத்து செய்யப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior