உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கோவில் திருவிழாவில் தகராறு ஒருவர் கைது: மூவருக்கு வலை

கடலூர் : 

                 கோவில் திருவிழாவின் போது நடந்த பாட்டுக் கச்சேரியில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த குடிகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி இரவு பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உறவினர் ஒருவர் எழுந்து நடனம் ஆடினார். அதனை அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ஊர் மக்கள் தட்டிக்கேட்டனர்.

                       இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் நின்றிருந்தபோது அவ்வழியாக வந்த பிரதீப்பிடம் உன்னால் தான் திருவிழா சரியாக நடக்கவில்லை என கூறி அவரை திட்டினர். அதனை தட்டிக் கேட்ட பிரதீப்பின் சகோதரி புனிதாவை பாலகிருஷ்ணன் தரப்பினர் கல்லால் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தெய்வசிகாமணி (38)யை கைது செய்தனர். மேலும் பாலகிருஷ்ணன், தெய்வசிகாமணி, மகாலிங்கம், பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பண்ருட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர் மாதாந்திர இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

முருகன் (அ.தி.மு.க., ): 

                    விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு முகாமில் உள்ள தமிழர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதித்துள்ள நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு தெரிவித்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளியே சென்ற நிலையில் தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி அனைத்து தீர்மானங்கள் நிறைவேறியதாக கூறி தேசியகீதம் ஒலிக்க கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தேசிய கீதம் பாடியதும் சேர்மன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர்.

ஒரு நிமிட கூட்டம்: 

                   பண்ருட்டி நகரமன்ற கூட்டம் காலை 11.30க்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 11.45க்கு சேர்மன் பச்சையப்பன், கவுன்சிலர்கள் நகர்மன்ற கூடத்திற்கு வந்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. பின் 11.55க்கு சேர்மன் உதவியாளர் ஜார்ஜ் வந்தார். 12 மணிக்கு கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் வந்தனர். கூட்டம் 12.10க்கு தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி 12.13க்கு முடிந்தது. 12.14க்கு தீர்மானம் படிக்கத் துவங்கியதும் அ.தி.மு.க., வினர் வெளிநடப்பு செய்ததும் 12.15க்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் முடிக்கப் பட்டது.

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திட்டக்குடி : 

               திட்டக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல்கள், நீதிபதியை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல் கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்ககொளஞ்சிநாதன், செயலாளர் முத்தழகன், பொருளாளர் கென்னடி உட்பட மூத்த வக்கீல்கள், வக்கீல்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திட்டக்குடி கோர்ட்டில் ஜாமீன் மனு, பிறப்பு சான்றிதழ் மனு, அவசர மனு ஆகியவற்றில் நீதிபதி கடும் நிபந்தனைகளை கடைபிடிப்பதால் பொதுமக்களும், வக்கீல்களும் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட தலைமை நீதிபதி தலையிட்டு உரிய தீர்வு காணும் வரை காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior