உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கடலூர், சிதம்பரம் பணிமனை முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணிக் கொடை, ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்காததை கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடலூர், சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

                  அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில், விழுப்பரம், கடலூர், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மண்டலங்களில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட தொழில் நுட்ப பணியாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் கடலூரில் 9 பேரும், சிதம்பரத் தில் 5 பேர் உட்பட விழுப் புரம் மண்டலத்தில் 30 பேர் சென்ற மாதம் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக் கொடை மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற் சங்கத்தினர் உட்பட அனைத்து தொழிற் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்: 

               இதேப் போல் சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் தங்களது எதிர்பை பணிமனையை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. 

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 

                     "நிர்வாகத்திறன் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த மாதம் வழங்கிய தொகை கூட இந்த மாதம் வழங்கப்படவில்லை. தற்போது பழுதடைந்த பஸ்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. விதி முறைப்படி வழங்கப்பட்ட ஓய்வூதியப் பலன் களை முறைப்படி வழங்கா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தனர்.

Read more »

கடலூர் கோர்ட்டில் 6 பேருக்கு 6 மாதம் சிறை

கடலூர் :

                   ஈமச்சடங்கில் பங்கேற்றவரை தாக்கிய 6 பேருக்கு கடலூர் கோர்ட்டில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதே ஊரில் ஈமச் சடங்கு ஒன்றிற்கு சென்றார். அன்று மாலை 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஊர் தலைவர் சதாசிவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் சுந்தர்ராஜன் வீட்டிற்குச் சென்று எப்படி ஈமச்சடங்கிற்கு செல்லலாம் என கேட்டு தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து சதாசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (2)ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுகந்தி, ஊர் தலைவர் சதாசிவம், ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு: ஊழியர்கள் அச்சம்

கடலூர் : 

                   கடலூர் கலெக்டர் அலுவலக ஆவண காப் க அறையில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காலை 7.30 மணிக்கு ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட காவலர் காத்தவராயன் அதனை விரட்டினார். வராண்டாவில் புகுந்த அந்த பாம்பு ஆவண காப்பக அறைக் குள் சென்றது. உடன் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அறை பூட்டப் பட்டிருந்ததால், வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர். பணிக்கு வந்த அலுவலக ஊழியர்கள் ஆவண காப்பகத்தில் நல்ல பாம்பு இருப்பதை அறிந்ததும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior