உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலி இடங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கை

திட்டக்குடி : 

               திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று மாலை தேர்வுக் குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

                திட்டக்குடி தாலுக்காவிலுள்ள கீழ்ச்செருவாய், தொழுதூர், புடையூர், பெண்ணாடம், சிறுபாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பத்து அரசு மாணவர் விடுதிகள் உள்ளது. அதில் காலியாக உள்ள இடங்களில் புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கணபதி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார். தாசில்தார் கண்ணன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரமகுரு, தேவேந்திரன், விடுதி காப்பாளர்கள் புதிய மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் பத்து விடுதிகளிலும் 230 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

பண்ருட்டி அருகே விவசாயியிடம் செக் மோசடி கேரள வியாபாரி சிறையிலடைப்பு

பண்ருட்டி : 

             செக் மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த முந்திரி வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

              பண்ருட்டி அடுத்த சாத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். முந்திரி விவசாயியான இவரிடம் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி அப்துல்ரகுமான் (55) முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். ஏசுதாசிடம் வாங்கிய முந்திரிக்காக அப்துல்ரகுமான் 2 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

              அதனை ஏசுதாஸ் வங்கியில் செலுத்தியபோது, அப்துல்ரகுமான் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. பலமுறை ஏசுதாஸ் கேட்டும் பணத்தை தரவில்லை. அதனைத் தொடர்ந் ஏசுதாஸ் பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2007ம் ஆண்டு "செக்' மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், "செக்' மோசடி செய்த அப்துல்ரகுமானை கோர்ட்டில் ஆஜர் படுத்த கேரள மாநில போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள மாநிலம் கிளகல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தங்கச்சன், ஏட்டுகள் அனில்குமார், விஜயகுமார் ஆகியோர் முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை கைது செய்து நேற்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் அருகே திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி

கடலூர் : 
      
            கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார். 

                கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், காளிதாஸ் நேற்று காலை புதுச்சேரி சென்று புதிய மோட்டார் பைக் வாங்கிக் கொண்டு, மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 7.30 மணி அளவில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த காளிதாஸ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior