உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 19, 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

சிதம்பரம் :

             சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி வாகனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆவணங்களுடன் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மோட்டார் வாகன அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மோட்டார் வாகன அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
 
                சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலிருந்து 145 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள், பள்ளி சார்பில் வந்திருந்த பிரதிநிதிகள், டிரைவர்களுக்கு வாகனங்கள் பராமரித்தல், இயக்குதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

Read more »

ஞாயிறு, ஜூலை 18, 2010

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வலியுறுத்தல்

நெய்வேலி:

              பிள்ளைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் கேட்டுக்கொண்டார்.

             நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 9-ம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்எல்சி மின்துறை இயக்குநர் (பொறுப்பு) மகிழ்செல்வன் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் பங்கேற்று பேசினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் பேசியதாவது:

             இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அமர்ந்த இடத்திலேயே காட்சிகளைக் கண்டு எல்லா செய்திகளையும் அறிந்துகொள்ளலாம் என்ற நிலையில், எதிர்காலத்தில் வாசிக்கும் தன்மை குறைந்து, எழுதுகின்ற பழக்கமும் குறைந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே பிள்ளைகளிடம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தவேண்டும் என்றார் ராமநாதன்.

             இதையடுத்து தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணைவேந்தர் ராமநாதன் வழங்கினார்.

பரிசுபெற்றோர் விவரம்:

முதல் பரிசு: சென்னை கே.சரசுராம் (விடியும் நாள்பார்த்து), 2-ம் பரிசு: சென்னை சரோஜாசகாதேவன் (வண்ணங்கள் என்றால்), 3-ம் பரிசு: செய்யாறு தி.தா.நாராயணன் (மங்கா). 

ஆறுதல் பரிசு பெறுவோர்: 

               பழனி வரத.ராஜமாணிக்கம் (அஸ்மிதா), மன்னார்குடி ம.கணேசன் (கருக்கல்), திருநெல்வேலி கல்யாணிபாலு (கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால்), சேலம் இலா.வின்சென்ட் (விசாரணைக் கூண்டு), கோவை கு.துளசிதாஸ் (தியாகமும் பரிசும்). நிகழ்ச்சியின் போது வேலூரைச் சேர்ந்த எழுத்தாளர் த.வ.சிவசுப்ரமணியன் பாராட்டப்பட்டார். நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

Read more »

1,500 இடங்களுக்கான வி.ஏ.ஓ. தேர்வு: 21-ல் அறிவிப்பு



                   ஜூலை 17: சுமார் 1,500 கிராம நிர்வாக அலுவலர்களைத் (வி.ஏ.ஓ.) தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு ஜூலை 21-ல் வெளியாகிறது. ஜனவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

               இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இப்போது மீண்டும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு ஜனவரி 20-ம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒரு நாளில் நடத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட உள்ள தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ. காலியிடங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரப்பப்பட்டன. இதற்கான தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். 10-ம் வகுப்பு மட்டுமே தேர்வுக்கான தகுதி என்பதால் மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
 
நவம்பரில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு: 

             தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வரும் நவம்பரில் வெளியிடப்பட உள்ளது. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2 நிலையிலான காலியிடங்கள் அதிகம் உள்ளன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற குரூப் 2 எழுத்துத் தேர்வின் முடிவுகள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகுமென்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior