உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 31, 2010

விருத்தாசலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

விருத்தாசலம்:

           விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.

இதுகுறித்து வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

            விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் இன்று (31ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு துவங்கும் நல்லூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் மற்றும் மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் கள் கலந்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்த ரிலையன்ஸ், ஓரல் பி, டாடா குரூப் ஆப் கம்பெனி, விஸ்வம் இன்ஸ்டியூட் ஆப் டெக் னாலஜி மற்றும் கேப்பிடல் சி.என்.சி., சென்டர் ஆகிய நிறுவனங்கள் இளைஞர்களை தேர்வு செய்கின்றன.முகாமில் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரையில் படித்த இளைஞர்களும், ஐ.டி.ஐ., முடித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில்மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லிக்குப்பம்:

           கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

               கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த 2007ம் ஆண்டு வரை கல்லூரியில் படித்த பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது. 2008ம் ஆண்டு முதல் சேரும் மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் வசூலிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் இக்கல்லூரியில் 2007ம் ஆண்டு சேர்ந்தவர்களிடமும் ஆண்டுக்கு 2,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 8,000 ரூபாய் வசூல் செய்துள்ளனர். மாணவர் கள் பல்கலைக்கழகத்தில் விசாரணை செய்ததில் 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு "இ லேர்னிங்' கட்டணம் கிடையாது என கூறியுள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், 

               "குடிநீர், கழிவறை அடிப்படை வசதிக்காக ஒவ்வொரு மாணவரும் வாரம் 10 ரூபாய் கட்டுகிறோம். ஆனால் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பள்ளி மாணவர் களைப் போல் நடத்துகின் றனர். சட்டத்துக்கு புறம் பாக வசூல் செய்த 8,000 ரூபாயை திரும்பத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மூன்று நாட்களில் பேசி தீர்வு காண்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால் பணத்தை திருப்பித் தரும் வரை போராட்டம் தொடரும்' என மாணவர்கள் கூறினர்.

Read more »

கடலூரில் தீ விபத்து:மூன்று வீடுகள் சேதம்

கடலூர்:

             கடலூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

                 கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.அதில் அலாவுதீன் பாபுலான், முரளி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior