உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்

பரங்கிப்பேட்டை,: 

           முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர். 

            கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுவதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி அழைக்கப் பட்டிருந்தார். 

             காலை 10 மணிக்கு வருவதாக இருந்த அவரை வரவேற்க மாணவியர், பள்ளி நுழைவாயிலில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலணி கூட அணியாமல் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சுடுமணலில் நிற்க முடியாமல் மாணவியர் அவதிக்குள்ளாயினர்.
              ஒரு வழியாக 11 மணிக்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்ற பின், "சீட்'டில் உட்காரச் செல்ல முயன்ற மாணவியரிடம், விழா முடியும் வரை நிற்க வேண்டும் என ஆசிரியர்கள் கட்டளையிட்டனர். மர நிழலில் நின்று ஓய்வெடுத்த பின், மீண்டும் 12 மணிக்கு விழா முடியும் வரை நிற்க முடியாமல் அவதியுடன் மாணவியர் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் திறப்பதில்லை

கடலூர்:

            மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் சரிவர திறக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

                 வேளாண் துறை சார்பில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நேற்று கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (வணிகம் மற்றும் விற்பனை) தனவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அமிர்தலிங்கம், கால்நடைத்துறை இணை இயக்குனர் கணேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற் றனர்.
 
ராமமூர்த்தி: 

          குணமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இரவு நேரத்தில் மட்டுமே எடை போடுகின்றனர். பகலில் எடை போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தராசு மற்றும் எடைக்கற்கள் 2007-08ம் ஆண்டில் முத்திரையிடப்பட்டுள்ளது.

இணை இயக்குனர் இளங்கோவன்: 

            புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேல்முருகன்: 

               சேத்தியாத்தோப்பில் கால்நடை மருத்தவமனையில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரத்தில் சென்று விடுவதால் மாடுகளுக்கு சினை ஊசி போட முடியவில்லை. கிராமப் பகுதிகளில் இருந்து 8 கி.மீ., தூரத்திற்கு மாடுகளை ஓட்டி வர முடியவில்லை. அதனால் வாரத்திற்கு ஒருநாள் ஒவ்வொரு கிராமத்திலும் சினை ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்சணாமூர்த்தி: 

           தூக்கணாம்பாக்கம், சி.என். பாளையம், கண்ணாரப் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை மருத் துவமனைகள் சரியாக திறப்பதில்லை. டாக்டர்களும் வருவதில்லை. இதனால் கால் நடை வளர்ப்பு குறைகிறது. சமீபத்தில் வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
இளங்கோவன்: 

               65 ஏக்கர் வாழை சேதமடைந் துள்ளது. அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் வழங்கப்படும்.

பஞ்சாட்சரம்: 

             மரவள்ளி, வெண்டை போன்ற தோட்டப் பயிர்களில் சப்பாத்திப் புழு தாக்குதல் உள்ளது. செம்மை நெல் சாகுபடிக்கு 3,000 ரூபாய் மானியத்தை பணமாக வழங்க வேண்டும்.
 
ராமலிங்கம்: 

              கிராமப்புறங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ மையம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை சர்பில் வழங்கப்படும் கருவிகள் குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

Read more »

சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு கோரிக்கை

விருத்தாசலம்: 

              சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரம் செய்து சுதந்திர தினத்தில் அறிவிக்கக் கோரி முதல்வருக்கு சத்துணவுப் பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் விஜயபாண்டியன் முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: 
                   சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 60 ஆயிரம் பேர் உரிய கல்வித் தகுதியுடன் 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றனர். தமிழக அரசின் தினக் கூலி, தொகுப்பூதியம் பெற்று 10 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் ஒரு லட்சம் பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் பணி வரையறை செய்துள்ளது. எனவே வரும் சுதந்திர தின உரையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரப்படுத்தி பணி வரையறை செய்து நிலையான காலமுறை ஊதியம் வழங்க அறிவிக்கவேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சம ஊதியம் வழங்கிடவும், ஓய்வூதிய விதிப்படி அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க அறிவிக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior