உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம்:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்டம்பர் 14-ம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ணையதள முகவரிகள்:

http://annamalaiuniversity.ac.in/results/index.htm,

              ஸ்ரீர்ம்.வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 04144- 237356, 237357, 237357, 237358, 237359.மொபைல் போனில் டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பாடங்கள்: 

                    எம்.ஏ.- எக்னாமிக்ஸ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன்,  பொலிட்டிகல் சயன்ஸ், இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், சோசியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், ஹியூமன் ரைட்ஸ், விலங்கியல், பயோ இன்பர்மேட்டிக்ஸ், எம்.காம்., எம்.காம் - கோ-ஆபரேட்டிவ் மேனேஜ்மெண்ட், எஜுகேஷன் மேனேஜ்மெண்ட், எம்.ஃபில் - ஆங்கிலம், வரலாறு, காமர்ஸ், அப்ளைடு ஜியாலஜி, விலங்கியல், தமிழ், லிங்கிஸ்டிக்ஸ், சைக்காலஜி மறறும் பிஜி டிப்ளமா இன் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், இங்கிலிஷ் லேங்க்வேஜ் டீச்சிங், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் பிரஷ் வாட்டர் பிஷ் கல்சர் மற்றும் சாயில் எக்காலாஜி, எர்த் வார்ம் கல்சர் கம்போஸிங் சான்றிதழ் வகுப்புகள்.

Read more »

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்க அமைச்சர்கள் ஆய்வு

கடலூர்:

               கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர் கண்ணைக் கவரும் இயற்கைச் சூழலும், தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் , திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில், விலங்கல்பட்டு முருகன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும் அமையப் பெற்றது, திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியாகும். 

                           கெடிலம் ஆறு தேவநாதசுவாமி கோயில் அருகே வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இக்கேôரிக்கையை வலியுறுத்தி, கடலூர் அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பு மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும், அதே நாளில் திருவந்திபுரம் திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன. இதனால் திருவந்திபுரம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. தேவநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து போகிறார்கள்.

                         எனவே திருவந்திபுரத்தை சுற்றுலாத்தலமாக்குவது குறித்தும், அங்கு விழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருவந்திபுரம் சென்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதல் கட்டமாக திருவந்திபுரத்திலும், கேôயிலைச் சுற்றியும் ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்களை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு வணிக வளôகம் ஒன்று கட்டிக் கெôடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் ஆலேôசனை தெரிவித்தனர்.சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்தும் சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும், தெôடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.இதில் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, நெடுஞ்சாலைத்துறை செயலர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நெடுஞ்சாலைப் பணிகள்:

அமைச்சர்கள் ஆய்வு

                           கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக் கோவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010-11-ம் ஆண்டில் 731.49 கி.மீ. நீளச் சாலைகள்  580 கோடியிலும், 34 பாலங்கள்  244.47 கேôடியிலும் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் சேவை வளாகத்தில் நடந்த இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ரவிக்குமார், நகராட்சித் தலைவர்கள் து.தங்கராசு (கடலூர்), பச்சையப்பன் (பண்ருட்டி) உள்ளிட்டேôர் கலந்து கொண்டனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஒரியன் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துடன் பட்டய வாணிப நடைமுறையில் புறதெôழில் மேலாண்மை என்ற படிப்பை வரும் நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது 

                        பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஒரியன் கல்வி நிறுவனத் தலைவர் மனிஷ்அகர்வால் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: வாணிப நடைமுறையில் புறஅண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிற்சாலைகள் வளமான மற்றும் முழுமையான வளர்ச்சி கொண்ட தொழிற்சாலைகளும். இதுபோன்று முதன்மை தொழில் நிறுவனங்கள் தங்களது பிரதி அலுவலகங்களை புறதெôழில் பின்னணியில் இந்தியாவில் வழங்கி வருவதால் அதிக செலவுகள் சேமிக்கப்படுகின்றன. தெôழிற்சாலைகளின் இத்தகைய வேலைவாய்ப்பை பெறும் நேôக்கை கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என எம்.ராமநாதன் தெரிவித்தார். தெôலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், ஒரியன் கல்வி நிறுவன மண்டல மேலாளர் ராஜ்கேôத்தாரி, சென்னை ஹெச்.எம்.ஹெச் கல்வி நிறுவன இயக்குநர் கஜாலி உள்ளிட்டேôர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior