உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழையின்றி கருகும் மானாவாரி நெற்பயிர்: விவசாயிகள் கவலை

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை பகுதிகளில் பருவ மழையை நம்பி மானாவாரியாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

                   பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள புதுச்சத்திரம், வில்லியநல்லூர், அரியகோஷ்டி, அகரம், சின்னகுமட்டி, பெரியகுமட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மணல் பாங்கான இடமாக உள்ளது. இங்குள்ள புஞ்சை நிலங்களில் பருவ மழையை நம்பி அதற்கு தகுந்தாற்போல் உரிய காலத்தில் நெல் மானாவாரி பயிர் செய்வது வழக்கம். பருவ மழை பொய்க்கும் பட்சத்தில் வயலில் ஒரு ஓரத்தில் குளம் வெட்டி அதில் இருந்து தண்ணீரை குடங்கள் மூலமாக பிடித்து தெளித் தும், இன்ஜின் வைத்து குழாய் மூலமாகவும் பாய்ச்சி வந்தனர். இதனால் நஞ்சை நிலங்களைவிட புஞ்சை நிலங்களில் பயிர் செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

                         தற்போது அத்தியாநல்லூர், கொத்தட்டை, வேளங்கிப்பட்டு, புதுச்சத்திரம் உட்பட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் நெல் பயிர் விவசாயம் செய்துள்ளனர். ஓரளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழை இதுவரை பெய்யாமல் உள்ளதாலும் சுட்டெரிக்கும் வெயிலாலும் நெற்ப்பயிர்கள் கருகி வருகிறது. சுனாமிக்கு பிறகு பரங்கிப் பேட்டை பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ளதால் புஞ்சை நிலங்களில் உள்ள குளத்தில் கூட போதுமான அளவில் தண்ணீர் சுரப்பு இல்லாமல் உள்ளது.  இதனால் கருகும் மானாவாரி நெல் பயிர்களை ஓரளவு காப்பாற்ற போர்வெல் போட்டு இன்ஜின் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். இருந்தும் அந்த தண்ணீர் மணல் பாங்கான அந்த இடத் திற்கு போதாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

அரியகோஷ்டி விவசாயி செல்வமணி கூறுகையில்,

                       "பருவ நிலைக்கேற்ப மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஐப்பசி மாதத்தில் கூட இன்னும் போதுமான மழை பெய்யவில்லை. பெரும்பாலான கிராமங்களில் உள்ள கூலித் தொழிலா ளர்கள் கட்டட வேலைக்கு செல்வதால் ஆள் பற்றாக்குறை காரணமாக நெற்பயிருக்கு தண்ணீர் இறைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் 100 ஏக்கர் வரை நெற்பயிர்கள் கருகி விட்டன' என்றார்.

Read more »

கடலூர் அரசு இசை பள்ளியில் 30ம் தேதி மாவட்ட அளவிலான கலை போட்டிகள்

கடலூர் : 

                 மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அரசு இசை பள்ளியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளியில் 5 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

                 இந்த ஆண்டு 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வரை உள்ளவர்களுக்கான  மாவட்ட அளவில் பாட்டு, நடனம், ஓவியப் போட்டிகள் நடக்கிறது.  இதில் முதலிடம் பெறும் சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் முதல் பரசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,500,  மூன்றாம் பரிசு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. 

                      மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்கும் சிறுவர்கள் போட்டிக்குத் தேவையான வரைதாள், சுதிப் பெட்டி மற்றும் டேப்ரிக்கார்டர் முதலிய உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். மேலும் நடனம் மற்றும் குரலிசைப் போட்டிகளில் தமிழிசைப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். போட்டியில் பங்கேற்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளிக்கு வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும். இத்தகவலை தஞ்சாவூர் கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read more »

NLC contract workers call off their strike

CUDDALORE:

              Contract workers of the Neyveli Lignite Corporation called off their 38-day old strike on Wednesday night following an agreement reached at bilateral talks held in Chennai.

           The management had agreed to give an additional wage of Rs.1,560 a month and a minimum bonus of 8.33% plus Rs.1,000. It also promised not to victimise workers who participated in the strike. T. Velmurugan, MLA, who is heading the Joint Action Council of the trade unions, said that the management had agreed to induct 5,000 workers into the NLC Indcoserve by third week of November. He thanked Chief Minister M. Karunanidhi for his support in finding an amicable solution to the issue.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior