உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 14, 2011

இந்தியா ஊழல் பாதையில் செல்கிறது : நரேஷ் குப்தா வேதனை




பண்ருட்டி : 

        "நேர்மையானவர்கள் பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

              கடலூர் மாவட்ட யூத் எக்ஸ்னோரா கிளப் சார்பில், "தூய்மை மற்றும் நேர்மையான தேர்தல் 2011' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம், பண்ருட்டியில் நேற்று நடந்தது.

விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசியது: 

              இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேர்மையானவர்கள், பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். மக்கள் சேவை செய்வதற்காகத் தான் அதிகாரிகள் உள்ளனர். அரசு பணியில் லஞ்சம் பெற்றால் தான் பணிகள் நடைபெறும் என்னும் நிலை உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானிகள், தொலைத்தொடர்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. ஆனால், தற்போது அனைத்து வசதிகளும் பெற்றாலும் ஊழல் பாதையில் செல்வது தவறு. இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

Read more »

பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்கள் ஒப்படைப்பு

பண்ருட்டி : 

          பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்கள் தாசில்தாரிடம்ஒப்படைக்கப்பட்டன. பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி 9ம் தேதி துவங்கி கடந்த 28ம் தேதி முடிவடைந்தது. 

             இதில் பண்ருட்டி, நெய்வேலி தொகுதியில் கணக்கெடுக்கும் பணியில் 78 மேற்பார்வையாளர்கள், 473 கணக்காளர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத் தலைவர் பெயர், உறவின் முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண வயது, மாற்றுத் திறனாளியாக இருந்தால் எந்தவகை, தாய்மொழி உள்ளிட்ட 29 கேள்விகளுக்கு கணக்காளர்கள் பதில் பூர்த்தி செய்து நேற்று முன்தினம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தை தாசில்தார் ஆனந்தராமிடம் ஒப்படைத்தனர்.

Read more »

கடலூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி வரும் 20ம் தேதி கடலூரில் நடக்கிறது

கடலூர் : 

       கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைக்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி வரும் 20ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 

இது குறித்து நேரு யுவக்கேந்திரா அலுவலக செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்ட நேரு யுவக்கேந்திரா சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வரும் 20ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க 18 வயதிற்கு மேற்பட்டு 35 வயதிற்குட் பட்டவராக இருக்க வேண்டும். இதில் இருபாலருக்கும் 100, 400, 800, 1,500 மீ., ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு பெயர் பதிவு செய்யவேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior