உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு காசோலை

சிதம்பரம் : 

            அண்ணாமலைப் பல்கலை மாணவ, மாணவிகள் திறமையை ஊக்கப்படுத்த 326 பேருக்கு அறக்கட்டளை சார்பில் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது.

            தமிழக அரசால் வள்ளலார் மற்றும் ராமசாமி படையாச்சியார் பெயரில் தலா 25 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை துவங்கப்பட்டது. இதன் வாயிலாக திறமை மிக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கினார். 

                எஸ்.சி., - எஸ்.டி., தனிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். கலைப்புல முதல்வர் டாக்டர் செல்வராஜி, மொழிப்புல முதல்வர் முத்து, வேளாண் புல முதல்வர் வசந்தகுமார், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன் ஆகியோர் பேசினர். விழாவில் ராமசாமி படையாச்சியார் அறக்கட்டளை சார்பில் 130 மாணவ, மாணவிகளுக்கும், திருப்பனந்தாள் காசி மடம் சார்பில் 63 முதுகலை தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுக்கும் காசோலை மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள்

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் விலாசங்கள் மாறியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு தற்போது அடை யாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் உள்ளவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெற்ற பலர் அதிர்ச்சியடைந்தனர். விண்ணப்பம் செய்தவரின் பெயருக்கு பதிலாக அவரது தந்தை பெயர் அல்லது வேறு ஒருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.மேலும் விலாசங்கள் மாறியுள்ளது. 

             கடலூரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி தனது அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அடையாள அட்டையில் ரேவதியின் படம் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் கருணாமூர்த்தி என ஆண் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று வழங்கப்பட்ட பலரின் அடையாள அட்டையில் பங்வேறு குழப்பங்கள் உள்ளதால் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வாக்காளர் கள் அதிருப்தி அடைந்தனர்.

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பெயர் திருத்தம், புதிய அடை யாள அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

           ஆர்.டி.ஓ., முருகேசன் 610 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தாசில்தார் சரவணன், தேர்தல் தாசில்தார் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்திற்கு சென்று வரும் 20ம் தேதி ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சியை அளிக்க போதிய இட வசதி உள்ளதா என ஆய்வு செய் தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior