உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 17, 2011

குழந்தைகள் வயிற்றுப்போக்கு: தடுப்பூசி அறிமுகம்

சென்னை:

              ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுப்பதற்கான தடுப்பூசி சென்னையில் புதன்கிழமை (மார்ச் 16) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.எஸ்.டி என்ற தனியார் நிறுவனம் இந்த தடுப்பூசியை அறிமுகப்பட்டுத்தியுள்ளது

.இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனந்தகிருஷ்ணன், குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன், நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் பெண்கள் நலப் பிரிவின் தலைவர் மோனிகா செüத்ரி ஆகியோர் சென்னையில் ம் கூறியது:

               வயிற்றுப்போக்கால் ஏற்படும் காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய்களால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாக ஏற்படுகின்றன. பிறந்த குழந்தைகளை தாக்கும் ஒரு வகை வைரஸ்களால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.உலகம் முழுவதும் ஓராண்டுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இறக்கின்றனர்.  இந்தியாவைப் பொருத்தவரை, ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 270 குழந்தைகள் இறக்கின்றனர்.

              உலகம் முழுவதும் இது போன்று நடைபெறும் இறப்புகளில் 23 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டும் இந்த வகை நோய்கள் தாக்குவதை தடுக்க முடியாது. அதற்கு தடுப்பூசி போட வேண்டியதும் அவசியம்.இதனால் எம்.எஸ்.டி. நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குழந்தை பிறந்த 12 வாரம் 6 நாள்களில் போட வேண்டும். அடுத்த இரண்டு தவணைகளை 4 வார இடைவெளியில் போட வேண்டும்.இந்தத் தடுப்பூசிக்கு உரிமம் பெறுவதற்கு முன்னரே சுமார் 71 ஆயிரம் குழந்தைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

                 இந்த தடுப்பூசி இப்போது பயன்பாட்டு வந்துள்ளது.இதுவரை 100 நாடுகளில் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 62 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4.4 கோடி தடுப்பூசிகள் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு சீட் இல்லை

கடலூர்:

            அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடலூர் மாவட்டத்தில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித்தேவன், செல்வி ராமஜெயம் ஆகிய இருவருக்கும், தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

              கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், திட்டக்குடி, ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு செல்வி ராமஜெயம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு அருண்மொழித்தேவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அருண்மொழித்தேவன் கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகிக்கிறார் ஆனால் இத் தேர்தலில் செல்வி ராமஜெயம், அருண்மொழித்தேவன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது. 

              புதன்கிழமை அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த இருவர் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் தொகுதிக்கும், அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் சொரத்தூர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது.

Read more »

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியீடு

            தமிழக சட்டமன்றத்   தேர்தலில், இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்கள் சேர்க்கை விண்ணப்பம் பெறப்பட்டது. 

                இவை வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை பெறப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. நேற்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதே போல், அடையாள அட்டை திருத்தம், மாற்றம் ஆகிய விண்ணப்பங்கள் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு, மார்ச் 30க்குள் பணிகளை முடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. இவர்களுக்கான அடையாள அட்டையும் அப்போது வழங்கப்பட உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior