உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 03, 2011

வடலூரில் மின் மயானம் அமைக்கக் கோரிக்கை

நெய்வேலி:
 
              வடலூர் நகரில் மின்சார மயானம் அமைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
                  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள வடலூரில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் வடலூர் நகரம் விரிவடைந்து பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வடலூருக்கான மயானம் மட்டும் போதிய இடவசதியின்றியும், ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டும் வருவதோடு. சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
 
            அவ்வழியே சடலங்களையும் எடுத்துச் செல்லமுடியாமலும், சடலங்களை புதைக்க இடம் கிடைக்காத நிலையும் உள்ளது. வடலூர் பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வடலூர் வர்த்தக சங்கம் சார்பில் மின் மயானம் அமைக்கவேண்டும் என்று கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக எம்.பி., அழகிரி, மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளார். இந்நிலையில் வடலூர் நகரில் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், வடலுர் நகரில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடலூர் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன.

Read more »

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால் என்ன செய்வது ?

          புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
            இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2,264 தபால் ஓட்டுகள்

கடலூர்:

         கடலூரில் தபால் ஓட்டுகள் போடும் பெட்டியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். 

         கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, காட்டுமன்னார் கோயில், நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலங்களில் தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று அந்தந்த பகுதிகளில் தபால் ஓட்டுக்கள் போடும் பெட்டியை கலெக்டர் ஆய்வு செய்தார்

பின்னர் கலெக்டர் கூறியது:

             கடலூர் மாவட்டத்தில் போலீஸ், தேர்தல் அலுவலர்களுக்காக 6,046 ஓட்டுச்சீட்டுக்களும், சர்வீஸ் மென்களுக்காக 439 ஆக மொத்தம் 6,485 ஓட்டுச்சீட்டுக்கள் வினியோகிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை சர்வீஸ் மென்களிடம் இருந்து 24ம், போலீஸ் மற்றும் தேர்தல் பணியாளர்களிடம் இருந்து 2,240 என மொத்தம் 2,264 ஓட்டுச்சீட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் கால அவகாசம் இருப்பதால் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior