உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 25, 2011

பள்ளிகளிலேயே இணையத்தளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

            பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்படுகின்றன.

               இந்த சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  

                 பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாகக் கிடைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகங்களை மாணவ, மாணவியர் நாடுகின்றனர்.  தேர்ச்சிபெற்ற அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கால விரயம், போக்குவரத்து செலவு ஆகியவற்றால் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  இந்தப் பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதனைத் தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ, மாணவியர் பயிலுகின்ற பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.  

             அதன்படி, 2011-ல் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த அனைத்து மாணவ, மாணவியர்களும் பள்ளியிலிருந்தே தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம்.  பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 25 (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. மே 25 முதல் 15 நாள்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வாறு 15 நாள்களில் பதிவு செய்யும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மே 25-ம் தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.  

            இந்தப் பணியை பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியவை இணைந்து செய்யும்.  மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக வரும்போதே, மாணவ, மாணவியர் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டை, குடும்ப அட்டையின் நகலினை தவறாது எடுத்து வந்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்களுக்கான பதிவு எண் பதிவு செய்யும் நாளன்றே வழங்கப்படும்.  பத்தாவது கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையினையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 

               மாற்றுத் திறனாளிகள் இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  படித்த பள்ளியிலிருந்தே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.  புதன்கிழமை முதல் 15 நாள்கள் வரை ஆன்-லைன் பதிவு அமலில் உள்ளதால் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.  

 இணையதள முகவரி 










Read more »

கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

             உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

          சென்னை, அண்ணா நகரில் இயங்கி வரும் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டிற்கான உயர்மட்ட பட்டய கூட்டுறவு மேலாண்மை படிப்பு வரும் ஜூலை 14ம் தேதி முதல் 2012 மார்ச் 21ம் தேதிவரை நடைபெற உள்ளது. பயிற்சி காலத்தில், கூட்டுறவுத் துறையில் நன்கு முன்னேறிய வெளி மாநிலங்களுக்கு இரண்டு வாரங்கள் அழைத்துச் சென்று, அங்கு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும். 

              மேலும், ஏதேனும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஏழு நாட்கள் தங்கி அந்த கூட்டுறவு நிறுவன செயல்பாடு குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். இந்த பயிற்சியில் சேர வரும் ஜூன் 1ம் தேதி அன்று 30 வயதிற்குட்பட்டவராகவும், பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் 10 ஆயிரம் ரூபாயை மூன்று சம தவணைகளில் செலுத்தலாம். 

பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பம் பெற 

முதல்வர், 
நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 
2377-ஏ, அண்ணா நகர், 
சென்னை-40 

             என்ற முகவரிக்கு 100 ரூபாய் "டிடி' அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் விவரம் வேண்டுவோர் 

044-26211423, 044-26210423

             ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கிராமங்கள் தோறும் சேவை ரிசர்வ் வங்கி புதிய திட்டம்

கடலூர் : 

           அனைவருக்கும் சேவை கிடைக்க கிராமங்கள் தோறும் வங்கியை நிறுவ ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி உதவிப்பொது மேலாளர் ஞானவேல் கூறியது: 

           நகரம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு வங்கி சேவை அவசியம். வங்கி சேவை கிடைக்காத கிராமங்கள் பின் தங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க கிராமங்களில் வங்கி சேவையை துவக்கிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன் முதன்கட்டமாக 2000 பேர் வசிக்கக்கூடிய கிராமத்திற்கு வங்கி சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
              கடலூர் மாவட்டத்தில் 219 கிராமங்கள் வங்கி சேவை துவக்குவதற்கு தகுதியான கிராமங்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வங்கி பொப்பேற்று சேவையாற்றிட வேண்டும். அவ்வங்கிகள் நிரந்தர வங்கியாகவும் நிறுவலாம், நடமாடும் வங்கியாகவும் செயல்படலாம், பிஸ்னஸ் கவுன்ட்டர் ஆகவும் இயக்கலாம். அந்தந்த வங்கியே அதற்கான செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ளும். கிராமங்களில் உள்ள வரவேற்பை பொறுத்து வங்கிகள் தமது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும்.
 
         இதில் பிஸ்னஸ் கவுன்ட்டர் செயல்படுத்த பல வங்கிகள் முன்வந்துள்ளன. கிராமங்களில் உள்ள நன்கு அறிமுகமான நபர்களை தேர்வு செய்து வங்கிகள் நியமிக்க உள்ளன. அந்த ஊழியரிடம் உள்ள சிறிய கருவி மூலம் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றவோ, முதலீடு செய்யவோ முடியும். ஒரு குறிப்பிட்ட இலக்குவரை இந்த கருவி மூலம் செயல்படுத்த முடியும். இந்த கருவி அருகில் உள்ள வங்கி கிளையோடு இணைக்கப்பட்டிருக்கும்.
 
            இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார். கலெக்டர் சீத்தாராமன், பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தனர். 


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior