உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

பண்ருட்டி:

             பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.

             இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது. புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்ட எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 

             பெளத்தர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டுவது, மனித இனத்தை சீரழைக்கும் போதை பொருள்கள் மற்றும் மதுவை ஒழித்து தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவில் உலக பெüத்த சங்க செயலர் எச்.எல்.விருத்தி (லண்டன்), முன்னாள் சிறுபான்மை குழு உறுப்பினர் பிக்கு அசுவகோஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, முன்னாள் பதிவுத் துறை அதிகாரி டி.கே.ராஜா, பிரசார செயலர் எம்.அரங்கநாதன், தலைவர் செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலர் எஸ்.வி.புத்தப்பிரியன் நன்றி கூறினார்.



Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு

           தமிழகத்தில் பத்து லட்சம் பேர் எழுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
       
               தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில் 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது. வி.ஏ.ஓ. தேர்வை தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 

              வழக்கமாக வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள், தேர்வு நடந்த நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையே உரிய காலத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவையும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு, இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

             இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாள்களின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. 

தேர்வு முடிவுகள் எப்போது? 

             இந்தச் சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15-க்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read more »

கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரைவில் ஆலோசனை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்:

               கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, அலுவலர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அமைச்சர் சம்பத் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த, வாக்காளர்களுக்கு நன்றி.  மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, விரைவில் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை விரைவில் சென்றடையும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பிரதான திட்டங்களை விரைந்து முடிக்க, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் விரைவில் பேசுவேன் என்றார் அமைச்சர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior