உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெல்லிக்குப்பத்தில் : 

         கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கலெக்டர் துவக்கினார். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியான எண் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதலாவதாக நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரத்தில் தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி துவங்கியது. விழாவில் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் அனந்தராம், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் அமுதவல்லி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழக்கும் பணிக்கான ஒப்புகை ரசீதை வழங்கி பேசியது: 

          மத்திய அரசு தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணியை துவக்கியுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி அடையாள எண் கொண்ட அட்டை வழங்கப்படுகிறது. இதில் அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். புகைப்படம், விழித்திரை, கைரேகைகள் அடங்கியிருப்பதால் ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் அட்டை வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

 பள்ளியில் விழா நடத்த தடை வருமா?: 

             பெரும்பாலும் அரசு விழாக்கள் என்றாலே பள்ளிகளில்தான் நடத்தப்படுகிறது. இதனால் அன்று முழுவதும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தினமலர் இதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து அரசு விழாக்களை பள்ளிகளிலேயே நடத்துகின்றனர். நேற்று முத்துகிருஷ்ணாபுரத்தில் நடந்த விழாவும் பள்ளியில்தான் நடந்தது. மேலும் அடையாள அட்டை வழங்கும் பணி குறைந்தது மூன்று நாட்களாவது நடக்கும் அந்த மூன்று நாட்களும் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கலெக்டராவது பள்ளிகளில் விழாக்கள் நடத்துவதை தடை செய்ய வேண்டும்.




Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம்:

           புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத் துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.

             தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் 4 முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். இரவு 8 மணிக்கு மத்தள பூஜை நடக்கிறது. நாளை 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சந்திரபிறை வாகன காட்சியும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வானக காட்சியும், அடுத்த மாதம் 1-ந் தேதி வெள்ளி பூத வாகன காட்சியும் ,2-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் காட்சியும், 3-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சியும், 4-ந்தேதி தங்க கைலாச வாகன காட்சியும், 5-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடனர் காட்சியும் நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

           இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன திருவிழா 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக சிவகாமசுந்தரி, நடராஜபெருமானுக்கு லட்சார்ச்சனை, ராஜ சபையில் மகாஅபிஷேகமும், திருவாபரண காட்சியும், பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பின்னர் சிவகாமசுந்தரி, நடராஜபெருமான் ஆயிரங் கால் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி 3 முறை முன்னும்,பின்னுமாக நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளிப் பார்கள்.இதனையே ஆனி திருமஞ்சனம் என்பர்
 
 
 
 
.

Read more »

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை

          அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
 

        "சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார். ஆனால், சென்னையில் 33 ஆண்டுகள் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் உள்ளது. அதன் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்து கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர்.

           2001-2006-ல் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்த வீட்டை அரசுடமையாக்கி அருங்காட்சியகம் அமைத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior