உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 23, 2011

சென்னைப் பல்கலைக்கழக M.B.A, M.C.A,ரேங்க் பட்டியல் வெளியீடு

       சென்னைப் பல்கலைக்கழக எம்.பி.ஏ படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

      எம்.பி.ஏ படிப்பு ரேங்க்பட்டியலை http://www.unom.ac.in/downloads/MBARegularProvSelectedList.pdf  

 எம்.சி.ஏ.படிப்பு ரேங்க்பட்டியலை http://www.unom.ac.in/downloads/mca11/index.html

 இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பபட்டுள்ளது. 

தொடர்புக்கு: 

044-25399686.




Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வகுப்புகள் தொடங்க கோரிக்கை

சிதம்பரம்:

         சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனு விவரம்:

          சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி.யில் விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முதுகலைப் பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட வட தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை முடிவடைந்துள்ளது.

            பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு வராத பி.சி. மற்றும் ஓ.சி. இடங்களை எம்.பி.சி. மற்றும் எஸ்.சி. மாணவர்களுக்கு வழங்க உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.






Read more »

பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம்அமைக்க 3 கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:

            பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வேலி அமைக்கும் பணியை மூன்று கிராம பொதுமக்கள் தடுக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

         பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பத்தில் தனியார் அனல்மின் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், கரிக்குப்பம், வில்லியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் அனல்மின் நிலையம் வருவதற்கு பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

             நேற்று கரிக்குப்பம், பஞ்சங்குப்பம், வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பா.ம.க., ஒன்றிய செயலர் செல்வகுமார் தலைமையில் கரிக்குப்பம் அருகே நடந்துவரும் வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த முயன்றனர்.தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனல்மின் நிலையம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் வேலி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

             ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடக்கும் வரை வேலி அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior