உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 22, 2011

சிதம்பரத்தில் ஆப்பிரிக்க மாணவ, மாணவிகள் நிர்வாண நடனம்

சிதம்பரம்:
 
             சிதம்பரத்தில் உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் படித்துவருகின்றனர். அவர்கள்  சனிக்கிழமை      இரவு சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 100 பேர் கலந்து கொண்டனர்.

               இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவுக்கு பிறகும் நீடித்தது. அப்போது மது அருந்திவிட்டு அவர்கள் ஆப்பிரிக்க வகை நடனங்களை ஆடி கொண்டிருந்தனர். திடீரென மாணவ - மாணவிகள் மேலாடைகளை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக நடமாடினார்கள். நேரம் செல்ல செல்ல முற்றிலும் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நடனமாடினார்கள்.

            இந்த தகவல் போலீசுக்கு கிடைத்தது. எனவே இதை தடுப்பதற்காக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் மாணவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீசாரை உள்ளே வரக்கூடாது என கூறி வெளியே பிடித்து தள்ளினார்கள். மதுபாட்டில்களையும் வீசி எறிந்தனர். இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர். இது சம்பந்தமாக போலீஸ் டி.எஸ்.பி. நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை மாணவர்கள் மீது வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை.
 
 
 
 
 

Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/2c3776f4-1da9-4020-a016-6dda6c8a2293_S_secvpf.gif
 
கடலூர்:
 
                 கடலூர் மஞ்சகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு புதுவை மாநில அறிவியல் இயக்க செயலாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். புனித வளனார் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகளார் முன்னிலை வகித்தார்.

               கண்காட்சியை கடலூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் மீனாட்சி சுந்தரம், அரசு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இக்கண்காட்சியில் 400 மாணவர்கள் பங்கேற்று 200 அறிவியல் படைப்புகளை வெளிபடுத்தினார்கள். கண்காட்சியின் மையக்கருத்தாக உயிரின பல்வகை அமைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்த்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் துறை ஆசிரியர்கள் மரியசேவியர், ஜான்பீட்டர், வாசு ஆகியோர் செய்து இருந்தனர்.
 
 
 
 
 

Read more »

கடலூர்திருப்பாதிரிப்புலியூர் நாகம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா


கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் அருகே உள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு பூ வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது
கடலூர்:

           10 நாள்கள் நடைபெற்று வந்த, கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தை அடுத்துள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழா, சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

              சனிக்கிழமை நிறைவு விழாவாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் வீதி ஊர்வலம் நடந்தது. கடலூர் நகர மலர் வணிகர்கள் மற்றும் மலர் வணிகத்தில் உள்ள தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் இக்கோயில் அமைந்து இருப்பதால், விழாவையொட்டி லாரன்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு இருந்தது.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior