உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில்அன்னதான திட்டம் துவக்கம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. இந்து அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். 

               அதன்படி  முதல் தமிழக கோவில்களில் விரிவாக்கப்பட்ட அன்னதான திட்டம் துவங்கியது. 

கடலூர் மாவட்டத்தில் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், 

ஸ்ரீமுஷ்ணம் பூவராகவசுவாமி கோவில், 

சிதம்பரம் தில்லை காளி கோவில், 

நெய்வேலி வேலுடையான்பட்டு சுப்ரமணியசுவாமி கோவில், 

பெண்ணாடம் பிரளய காளேஸ்வரி கோவில், 

திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவில் 

            என 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் துவக்கி வைத்தார். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலர் குமார், ஜெ.,பேரவை நகர செயலர் கந்தன், ஒன்றிய செயலர் பழனிச்சாமி, கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மேனகா உட்பட பலர் பங்கேற்றனர். 

               அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் இதுவரை 64 ஆயிரத்து 300 ரூபாய் நன்கொடை வழங்கியுள்னர். இதில் கடலூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா 5,000 ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம்: தில்லை காளி கோவிலில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அலுவலர் சிவக்குமார், திருவந்திபுரம் கோவில் நிர்வாக அலுவலர் வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நெய்வேலி: வேலுடையான்பட்டு கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் துவக்கி வைத்தனர். என்.எல்.சி., செயல் இயக்குனர் சிவஞானம், அ.தி.மு.க., தொழிற் சங்க பிரமுகர்கள், ஜெ., பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

நெல்லிக்குப்பம் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் நிவாரண உதவி: எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/9682124e-07e2-4cf5-92ff-a5093d8765dd_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியை சேர்ந்த முகமதுகான் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரபுதீன், முகமதுகனி, முகமது அனீபா ஆகியோரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலானது.
 
               இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் தே.மு.தி.க. சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், வேட்டி-சேலை, அரிசி ஆகியவைகளை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. வழங்கினார். அவருடன் நகர செயலாளர் கஜேந்திரன், நகர பொருளாளர் நாகராஜன், நகர மாணவர் அணி செயலாளர் இசைவேந்தன், த.மு.மு.க. நகர தலைவர் அப்துல் ரஹீம், உசேன், ராஜாஹாஜா மொய்தீன், முகமது அனீப், அப்துல் ரஹ்மான், முகமது ஜிபேல், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Read more »

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.

                   பின்னர் இத்திட்டம் மாநில அளவில் 306 கோயில்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது, தற்போது மேலும் 106 கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழகத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது,   கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கிவைத்தார், இந்து அறநிலைய இணை ஆணையர் ஜகநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மருதவாணன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், உள்ளீட்டோர் பங்கேற்றனர்.

             இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பெருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தில்லைக் காளியம்மன் கோயிலில் தினந்தோறும் திங்கள்கிழமை முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior