உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

திட்டக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/3849d3e8-db76-492f-9082-ccd638d36695_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
               திட்டக்குடியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் துணை சூப்பிரண்டு பேசும் போது விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் எனற உறுதி மொழியை ஒவ்வொரு ஓட்டுனரும் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
 
              திட்டக்குடியில் காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகம் முன்பு மெயின் ரோட்டில் சென்ற இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் மீது முன்புற விளக்குகளில் கருப்பு நிறஸ்டிக்கர்கள் ஒட்டபட்டன. அதேபோல் டியர் வண்டி, மாட்டுவண்டிகளில் சிவப்பு நிற ரிப்லக்டர்கள் பொறுத்தப்பட்டன. துணை சூப்பிரண்டு வனிதா தலைமையில் காவல் துறையினர் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்தபணியை மேற்கொண்டனர். 
 
அப்போது துணை சூப்பிரண்டு வனிதா வாகன ஓட்டுனர்களிடம் பேசியது:-
 
         வாகன விபத்துகளில் வாகன சேதம் ஒருபக்கம் இருந்தாலும். இதில் ஏற்படும் உயிர் இழப்புகள் ஒரு குடும்பத்தையே பாதிப்பதுடன் அந்த குடும்பம் சரியான வழிகாட்டுதல் இன்றி பொருளாதார பின்னடைவு ஏற்படுத்துகின்றன. எனவே ஒவ்வொரு ஓட்டுனரும் புதிய வாகனங்கள் வாங்கும் போதும் ஓட்டும்போதும் விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் என்ஜின் பழுது


என்ஜின் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில்.
கடலூர்:

            என்ஜின் பழுது காரணமாக விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பொதுமக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் அவதியுற்றனர்.

               விழுப்புரத்தில் இருந்து மாயவரம் செல்லும் பயணிகள் ரயில், வெள்ளிக்கிழமை காலை 6.40 மணிக்கு கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் என்ஜினைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. 

                இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக 7.45 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் உரிய நேரத்தில் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. மேலும் என்ஜின் பழுது காரணமாக, லாரன்ஸ் சாலையில் நீண்டநேரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால், அந்த வழியாகச் செல்வோர் பெரிதும் பாதிக்கப் பட்டனர். பொதுமக்கள் தகராறு செய்ததைத் தொடர்ந்து, ரயில்வே கேட்டை சிறிது நேரம் திறந்து பின்னர் மூடினர்.





Read more »

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர்:'

             கடலூரில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 82 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 

              விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சேமிப்புக் கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை 3 பிரிவாக பிரிக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ரேஷன் பொருள்களுக்குப் பதில் பணமாகத் தரும் ஆலோசனையைக் கைவிட வேண்டும் என்று கோரியும் மறியல் போராட்டம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது. 

                 கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பி.ஜான்ஸி ராணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.லட்சுமி, என்.ஆனந்தி, ஏ.ரஜியாபேகம், கே.அன்புச்செல்வி உள்ளிடடோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வி.மேரி, மாவட்டத் தலைவர் ஆர்.சிவகாமி, பொருளாளர் பி.தேன்மொழி, துணைச் செயலாளர் எம்.ஜெயசித்ரா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மறியலில் ஈடுபட்ட 82 பெண்களை போலீஸôர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior