உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 20, 2011

தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் மாற்றம்: எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டண அறிவிப்பு

          தமிழகத்தில் மின் கட்டண மதிப்பீட்டு முறையில் விரைவில் மாற்றங்களைச் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

               இப்போதுள்ள மீட்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட வரும் அலுவலருக்காக வீட்டில் அட்டையை வைத்துக் கொண்டு எதிர்பார்க்கும் நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் அது தீர்மானித்துள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நவீன வசதி காரணமாக மின் பயன்பாட்டு கட்டணம் குறித்த தகவல் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் வந்து விடும்.

பெரிய நகரங்களில்...

           முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம்,திருநெல்வேலி உள்ளிட்ட 110 நகரங்களில் ரேடியோ அதிர்வலைகளைக் கொண்ட டிஜிட்டல் மின் கணக்கீட்டு மீட்டர்களைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

              இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் மின் கணக்கீட்டு அலுவலர் வந்து கையடக்க கருவியில் மின் பயன்பாட்டு அளவை பதிவு செய்து கொண்டு, அதற்குரிய மின் கட்டணத்தைமின் நுகர்வோர் பயன்பாட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தும் செல்கின்றனர். இவ்வாறு மின் பயன்பாட்டு அளவை அலுவலர் பதிவு செய்த பிறகு, அலுவலகத்துக்குச் சென்று கம்ப்யூட்டரில் மீண்டும் பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் அலுவலர் பதிவு செய்த அடுத்த தினமே இப்போது மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்த முடியாத நிலை உள்ளது.

              அறிமுகமாக உள்ள நவீன டிஜிட்டல் முறை மின் கணக்கீட்டின்படி, கணக்கீட்டு அலுவலர் குறிப்பிட்ட குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்றவுடன் அங்குள்ள டிஜிட்டல் கருவிகளில் உள்ள மின் பயன்பாட்டு கணக்கீடுகள் அனைத்தும், அலுவலரின் கையடக்க கருவிக்குள் சேமிக்கப்பட்டு விடும். இதையடுத்து மத்திய கம்ப்யூட்டர் தொகுப்புக்கு மின் பயன்பாட்டு கணக்கீடு மற்றும் மின் கட்டண தகவல்கள் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் நுகர்வோருக்கு மின் கட்டணத் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்









Read more »

கடலூரில் தொடர்ந்து சேதம் அடையும் பாதாள சாக்கடை மூடிகள்


கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைத் திட்ட, ஆள் இறங்கு குழியில் விழுந்து கிடக்கும் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரி.
கடலூர்:
 
           கடலூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளில், ஆள்இறங்கு குழிகளின், மேல்மூடிகள் இப்போதே தொடர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. 
 
                 இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றன.ரூ.60 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில், 25 ஆயிரம் ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாளச் சாக்கடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், இக்குழிகள் வழியாக இறங்கி அடைப்புகளை அகற்ற முடியும். இவைகள் ஆள் இறங்கு குழிகள் என்று அழைக்கப்பட்டாலும், திட்டப் பணிகள் முடிவடைந்து, செயல்படும் காலத்தில் அடைப்புகளை அகற்ற, இயந்திரம் பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.எப்படி இருப்பினும் திட்டம் செயல்படத் தொடங்கும் முன்னரே, இந்த ஆள் இறங்கு குழிகளில் போடப்படும் மூடிகள் பெரும்பாலானவை, உடைந்து விடுகின்றன.
 
                இதனால் பெருமளவில் ஆபத்தும் காத்து இருக்கிறது என்று பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மூடிகள் தரமானதாக இல்லாததே இப்பிரச்னைகளுக்குக் காரணம். திட்டம் செயல்படத் தொடங்கு முன்னரே, நூற்றுக்கணக்கான மூடிகள் உடைந்து, நாள் கணக்கில் கேட்பாரற்றுக் கிடந்து, பலரும் புகார் தெரிவித்த பிறகு, அவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.ஆள்இறங்கு குழிகளில் மூடிகள் உடைந்து, லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்களும் அடிக்கடி குழிகளில் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு இத்தகைய விபத்து நேரிட்டால் அவரது கதி என்னவாகும் என்பதே மக்கள் தெரிவிக்கும் அச்சம்.
 
                    திட்டம் செயல்படும் காலத்தில், சாக்கடை நிரம்பியிருக்கும் நிலையில், மூடிகள் உடைந்து இத்தகைய விபத்து நேரிட்டால், சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக் குறியாகுமே என்பதும், மக்கள் எழுப்பும் மற்றொரு சந்தேகம்.
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் உள்ளாட்சி கட்ட தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதி

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 81 சதவீதம் ஓட்டுப்பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவில் கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் விவரம்:

நகராட்சி: 

கடலூர் 71, 
சிதம்பரம் 75.1.
 
பேரூராட்சி:

குறிஞ்சிப்பாடி 84,
வடலூர் 79, 
திட்டக்குடி 80, 
சேத்தியாத்தோப்பு 79, 
ஸ்ரீமுஷ்ணம் 83, 
காட்டுமன்னார்கோவில் 75, 
லால்பேட்டை 65, 
அண்ணாமலை நகர் 81, 
புவனகிரி 82, 
கிள்ளை 77, 
பரங்கிப்பேட்டை 71.

ஊராட்சி ஒன்றியங்கள்: 

கடலூர் 86, 
குறிஞ்சிப்பாடி 88, 
மேல்புவனகிரி 87.83, 
கீரப்பாளையம் 86.58, 
பரங்கிப்பேட்டை 83.36, 
குமராட்சி 68.28, 
காட்டுமன்னார்கோவில் 84.72.

மாவட்டம் முழுவதும் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior