உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 29, 2011

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் விளையாட்டுப் போட்டி

கடலூர்:

           கடலூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

               தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இப்போட்டியில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட டென்னிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் சேதுராமன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.











Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹெச்.சி.எல். லேர்னிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் (இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டி) படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

            துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹெச்.சி.எல் நிறுவன துணைத்தலைவர் ஆனந்த் ஏகாம்பரம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  தொலைதூரக்கல்வி இயக்க இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் கூறியது: 

                எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் பாடத்தினை ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சியானது இரண்டு நிறுவனங்களும் பரஸ்பர முறையில் இணைந்து நல்ல கல்வியை வழங்குவதன்  மூலம் இம்முறையை மேலும் தொடருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இப்பாடங்களை கற்பதன் மூலம் மாணவர்களும், பொதுத்துறை, தனியார்துறை, வங்கி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் தொழிலுக்கான திறனை எளிதில் பெற முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.

ஹெச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஆனந்த்ஏகாம்பரம் கூறுகையில், 

                இந்திய தொழில் நிறுவனங்களில் ஏற்படும் போட்டிகளை எதிர்காலத்தில் உடனடியாக சமாளிக்க முக்கியமாக கருத்தப்படுவது திறமையான நிர்வாகம், விரைவான வளர்ச்சி மற்றும் பாதுகாத்து நிர்வகித்தலாகும். இதனை கருத்தில் கொண்டு நம்நாட்டின் புகழ்மிக்க கல்வி நிறுவனமான அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து இந்த மேலாண்மை பட்டப்படிப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஆனந்த் ஏகாம்பரம்.











Read more »

வெள்ளி, அக்டோபர் 28, 2011

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பதவிகளின் விபரம்

                  தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

                இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

மாநில தேர்தல் வெளியிட்ட தகவலின்படி 
           
            அ.தி.மு.க. 9806 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

                        10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில் அ.தி.மு.க. 579 வார்டுகளை கைப்பற்றியது. தேர்தல் நடத்த 124 நகராட்சியில் அ.தி.மு.க. 89 நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 1680 நகராட்சி வார்டுகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 285 பேரூராட்சிகளையும், 2849 பேரூராட்சி வார்டுகளையும் அ.தி.மு,க, கைப்பற்றியது.

                மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 569 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3745 பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.   அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக தி.மு.க. 4023 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது. 23 நகரசபைகளும், 121 பேரூராட்சிகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 10 மாநகராட்சி வார்டுகளில் 128 பதவிகளையும், நகரசபை வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1820 பதவி களையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 26 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டில் 942 பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

                  3-வதாக சுயேட்சைகள் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர். மொத்தம் 3309 பதவிகள் சுயேட்சைகளுக்கு கிடைத்தது. இதில் 5 நகர சபையும், 64 பேரூராட்சியும், மாநகராட்சியில் 55 வார்டு களும் அடங்கும். தே.மு.தி.க. 855 பதவிகளை பிடித்து 4-வது இடத்தை கைப்பற்றியது. இதில் 2 நகரசபையும், 3 பேரூராட்சியும், மாநகராட்சியில் 8 வார்டுகளும் இதில் அடங்கும்.

                      காங்கிரஸ் கட்சிக்கு 737 பதவிகள் கிடைத்தது. இதில் 24 பேரூராட்சி அடங்கும்.அந்த கட்சிக்கு ஒரு நகரசபை கூட கிடைக்கவில்லை. பா.ம.க. 395 பதவிகளையும், பாரதிய ஜனதா 2 நகரசபை உள்பட 270 பதவிகளையும், ம.தி.மு.க. ஒரு நகரசபை உள்பட 193 பதவிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 நகரசபை உள்பட 159 பதவிகளையும், இந்திய கம்யூனிஸ்டு 99 பதவிகளையும் பிடித்தன. மற்றவைகள் 47 பதவிகளை பிடித்தன.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior