உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் மழைக்கால நோயை தடுக்க 63 மருத்துவகுழு


கடலூர்:
 
         தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு பகுதிகிளல் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 535 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.  

              தொடர்ந்து பெய்த மழையால் ஏற்கனவே 4 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற் கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

         மழை பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் பெறும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04142-231653 என்ற தொலைபேசி மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

           மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும் என்றும் தயாரித்து 24 மணிநேரத்திற்கு மேலான உணவுகளை உண்ண வேண்டாம் என்றும் கொசுக்களால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் வீட்டின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கலெக்டர் அமுதவல்லி வலியுறுத்தி உள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் வெள்ளாற்றில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து விழுந்தது


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/bc3c4464-2ddf-4d87-965e-bb5f2b3db717_S_secvpf.gif
 
விருத்தாசலம்:

            விருத்தாசலம் வெள்ளாற்றில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று மாலை வெள்ளாற்று தடுப்பணை இடிந்து விழுந்தது.   இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வெள்ளாற்றையொட்டி உள்ள மருங்கூர், காவனூர், கீரமங்கலம், பவழங்குடி உள்ளிட்ட 10 கிராம வயல்களில் புகுந்தது. நெற்பயிற்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. 
 
 
 
 
 

Read more »

சனி, நவம்பர் 05, 2011

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் பலத்த மழை : பலியானவர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

கடலூர்:
 
           தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 
 
             கடந்த 25-ந் தேதி கனக்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) மின்னல் தாக்கி பலியானார். நவம்பர் 1-ந் தேதி கடலூரை அடுத்த நாணமேடு கிராமத்தில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து தையல் நாயகி (43) என்ற பெண் பலியானார். நேற்று முன்தினம் (3-ந் தேதி) கடலூரை அடுத்த ஏ. வடுகபாளையத்தை சேர்ந்த ரங்கநாதனின் மனைவி ஜிவா (26) மின்சாரம் தாக்கி இறந்தார்.

          இந்த நிலையில் நேற்று வெள்ளாற்றை கடக்க முயன்ற திட்டக்குடியை சேர்ந்த பெருமாள் (60) ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். வசிஷ்டபுரம் அருகே கரை ஒதுங்கிய அவரது உடலை மீட்க முயற்சித்தபோது மீண்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior