உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 04, 2011

திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/37bdfb2c-1dc3-4484-bfc4-9b20b7956922_S_secvpf.gif
திட்டக்குடி:

        திட்டக்குடி அருகே நிதிநத்தம் ஓடை பாலத்தை ஒன்றிய குழுத்தலைவர் பார்வையிட்டார். திட்டக்குடியை அடுத்துள்ள நிதிநத்தம் ஓடையில் பெறுமுளை சிறுமுளை குமாரை வேப்பூர் உட்பட 20 கிராமங்களை இணைக்கும் ஓடைப்பாலம் ஒன்று உள்ளது இந்தபாலம் வழியாக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள திட்டக்குடி வந்து செல்லவும் விவசாய பொருட்களை எடுத்து வரவும் பயன் படுத்தி வந்தனர்

           இந்நிலையில் கடந்த 1992-ல் பெய்த கனமழை காரணமாக நிதிநத்தம் ஓடைப்பாலம் உடைந்து பாலத்தின் ஒரு பகுதி ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் திட்டக்குடியில் இருந்து நிதிநத்தம் வழியாக வேப்பூர் வரை சென்ற அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தற்போதும் பெய்த கனமழைகாரணமாக இந்தபாலம் முழுமையாக சேதமடைந்தது.இதனால் விவசாயிகள் மாணவர்கள் கிராமமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

             இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாயிடம் முறையிட்டனர் அதன் பேரில் கே.பி.கந்தசாமி அந்த ஓடையை நேரில் பார்வையிட்டார். இதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நபார்டு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் விவாதிக்கப்பட்டது. ஓடைப்பாலத்தை கட்டு வதற்கு மட்டும 30 லட்சம் ரூபாயும் நிதிநத்தம் இணைப்பு சாலையை (3 கிமி) புதுப்பிக்க 20 லட்சம் ரூபாயும் தேவைப்படுவதாய் அதிகாரிகள் தெரிவித்தனர். 

             வெள்ளப்பாதிப்பு காரணமாக ஓடைபாலம் சேதம் அடைந்துள்ளதால் குறிப்பிட்ட நிதியை மாவட்ட கலெக்டரின் பரிந்துரை பேரில் வெள்ளப்பாதிப்பு நிதியில் இருந்து பெறுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. மேலும் நபார்டு நிதி பெற்று குறிப்பிட்ட பணியை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒன்றியக்குழுத்தலைவர் கே.பி.கந்தசாமியிடம் அந்தபகுதியை சேர்ந்த கிராமமக்கள் திரண்டு வந்து அவரிடம் முறையிட்டனர் அப்போது அவர் கிராமமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார்.

                அவருடன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்னக்கிளிகுனசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தியாகராஜன், பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், ஒன்றிய அதிமுக துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியம், ஊராட்சி செயலாளர்கள் தங்கவேல், முத்துராமன், அண்ணா தொழில் சங்க மாவட்டத்தலைவர் ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். 
















Read more »

வெள்ளி, டிசம்பர் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

               உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.   இதையட்டி கடலூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.

           அப்போது, அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 36 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வழங்கி பேசினார்.

       கடலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் 3 ஆயிரத்து 796 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். எச்.ஐ.வி. பரவக் கூடிய விதங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.ரத்தப்பரிசோதனை செய்த பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

             இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.    









Read more »

வியாழன், டிசம்பர் 01, 2011

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: கடலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் கடைகள் அடைப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/98801d17-dbe8-4cc6-9412-28fc48f91147_S_secvpf.gif
 
கடலூர்:
 
            கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.   சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

            இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டுகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.   அதுபோல் இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

             கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்டிக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள கடலூர் லாரன்ஸ் ரோட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலையே வெறிச்சோடி கிடந்தது.

            நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதுபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள், மருந்து கடைகள் மட்டும் இயங்கின.    விழுப்புரம் புதிய பஸ்நிலைய பகுதிகளில் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளியூர் பயணிகள் அவதி அடைந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணை நல்லூர் பகுதிகளிலும் அனைத்த கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.   இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழு அளவில் இயங்கினாலும் கடையடைப்பு காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior