உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 23, 2012

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை

           நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மக்கள் தொகை கணக்கெப்பு துறை செய்து வருகிறது. 

              தமிழ்நாட்டில் முதல்கட்டமாக கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இருப்பிட அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 829 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 11.7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சம் பேர் உள்ளனர். இப்போது அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.   இந்த அடையாள அட்டையில் பெயர், பாலினம், தாய்-தந்தை பெயர், பிறந்த தேதி, தாலுகா, மாவட்டம்,

           அடையாள அட்டை எண் ஆகிய விபரங்கள் இடம் பெற்று இருக்கும். உறுப்பினர் பெயரும், தாய், தந்தை பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மற்ற விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.  ஸ்மார்ட் கார்டு போன்ற இந்த கார்ட்டில் உறுப்பினர் பெயர் தொழில், விரல்ரேகை உள்ளிட்ட முழு குடும்ப விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.   இந்த அடையாள அட்டை வழங்கும் பணியை நாளை (23-ந் தேதி) காஞ்சீபுரம் மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்.

           6 லட்சம் பேருக்கும் அடையாள அட்டைகள் தபாலில் அனுப்பப்படும். 2 மாதத்துக்குள் அனைவருக்கும் கிடைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.    தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் திருச்சி, கடலூர், அரியலூர் உள்பட 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை, விழி படலம் பதிவு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.12 கோடி. இதில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 1/2 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
















Read more »

ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூரில் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கவில்லை

கடலூர்:
          தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை இன்னமும் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவும் இல்லை. இதனால்,பயனாளிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  
            கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகள், முதியோர் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இவை வழங்கப்பட்டு விடும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இன்னமும் வழங்கப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 
          ஆனால் தேவையில் 50 சதவீத அளவுக்கு வேட்டி, சேலைகள் வந்து இருப்பதாகவே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  புயலில் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகையுடன் இலவச வேட்டி,சேலைக்கான டோக்கனும் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை புயல் சேதத்துக்கான நிவாரணமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் கூட இன்னமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரவில்லையாம்.  
              இந்நிலையில் முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு மட்டும் பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆனால் மற்றவர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி-சேலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 ஆயிரம் பேருக்கு இலவச போர்வை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/60624c2b-e96e-4801-86d1-b414b1c3bbc5_S_secvpf.gif

வடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதித்த 20 ஆயிரம் பேருக்கு தி.மு.க. சார்பில் இலவச போர்வைகளை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழங்கினார். தமிழகத்தில் தானே புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அந்த பகுதிகளுக்கு புயல் சேத நிவாரணமாக தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

            அதையடுத்து கடலூர் மாவட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் சென்னையில் அவர் வழங்கி னார். இந்த நிதியின் மூலம் 20 ஆயிரம் போர்வைகளை விலைக்கு வாங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச போர்வைகைள வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கிராமத்திலும், குறிஞ்சிப்பாடியிலும் நடந்தது. கடலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இலவச போர்வையை தி.மு.க. நிர்வாகிகளிடம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

               முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் நந்த கோபால கிருஷ்ணன், சபா. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் சிவகுமார், வி.கே. வெங்கட்ராமன், தலைமை செயற்குழு ஜெயராமன், நகர செயலாளர் புகழேந்தி, ராஜேந்திரன், மணிவண்ணன், மாவட்ட இலக்கிய அணிஅகரம் நாராயணசாமி,மாவட்ட நெசவாளரணி பழனிசாமி, கடலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஞானசேகரன். குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங் கம், வடலூர் பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் திருநீலம், குறிஞ்சிப்பாடி பொருளாளர் ராமர், விடுதலை சேகர், இளைஞரணி கே.ஆர். ராமச்சந்திரன், கே.பி.ஆர். பாலமுருகன், டி.எம். குமார். பண்ருட்டி ஒன்றிய இளைஞர் அணி ஞானமணி,பண்ருட்டி ஒன்றிய அவைத்தலைவர் புலவர் நாராயணசாமி, பொருளாளர் பொன்னம் பலம், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், எல்.என்.புரம் துரைராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவமுருகன், மருங்கூர் ஜனார்த்தனம், அண்ணா கிராமம் புருஷோத்தமன், வடலூர் சுப்பராயலு, ஷாகுல் அமீது உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior