உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 11, 2012

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

கடலூர்:
 
              திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் நின்றுச் செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.÷கடலூர் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
 
          இதையொட்டி திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்ததும், தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், துணைத் தலைவர்கள் பால்கி, பாபு, நல்லதம்பி, பொருளர் அருள்செல்வன், பேராசிரியை சாந்தி, ஆசிரியை வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
          சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கிள்ளை பேரூராட்சி சேர்மன் வித்தியாதித்தன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாலசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் பொன்மொழி, காத்தவராயசாமி, குணசேகரன், வாசுதேவன், ஸ்டாலின், விஜயலட்சுமி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர். நமதில்லம் டிரஸ்ட் சிறப்பு விருந்தினர் சுவாமிநாதன் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்

Read more »

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

"தானே" புயலின் பாதிப்புகள் பற்றி தங்கர்பச்சானின் ஆவண படம்

     "தானே" புயலின் பாதிப்புகள் பற்றி டைரக்டர் தங்கர்பச்சான் ஒரு ஆவண படம் தயாரித்து, டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `தானே புயலின் அறுவடை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

    35 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவண படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கிறது. `தானே' புயலினால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எத்தகையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்? என்பதை படம் சித்தரிக்கிறது.

படம் முடிந்தபின் டைரக்டர் தங்கர்பச்சான் கூறியது

         ’’கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விழுந்து கிடப்பவை எல்லாம் வெறும் மரங்கள் அல்ல. எங்கள் தாத்தா-பாட்டி. அப்பா-அம்மா. அவர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவை. மரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் வாழும். இதை ஒரு மாவட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. நாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க, 8 ஏக்கருக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். இந்த இரு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்தது 10 ஆண்டு காலம் ஆய்வு படிப்பு வரை, கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.
மக்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும். எனவே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior