உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 19, 2012

கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் எ ய்ட்ஸ் நோய் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

கடலூர் : 
 
         கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முதல்வர் ரமேஷ் பாபு வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி டைட்டஸ் டேவிட் ஆகியோர் பேசினர். செந்தில்முருகன், ரவி, சண்முகம் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட கண்காணிப்பாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, காஞ்சனா, தேவதாஸ் பொன்னையா சிறப்புரையாற்றினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார். 










Read more »

ஞாயிறு, மார்ச் 18, 2012

திருமாந்துறையில் சிவன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-பேதி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/83a9f3dc-7d16-4e9e-ac6c-20aad90ee793_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
         திட்டக்குடியை அடுத்த திருமாந்துறையில் உள்ள சிவன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் திரளான ஆண்-பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அங்கனூரை சேர்ந்த கிராமத்தினர் சிலர் அந்த கோவில் பிரசாதத்தை பெற்று கொண்டு இரவில் வீடு திரும்பினார்கள்.   
 
      காலையில் அந்த பிரசாதத்தை சாப்பிட்ட தமிழ்ச்செல்வி (வயது 38), பூங்கா (29), ஆனந்தி (25), அமுதா (28), அனுசுயா (20), சந்துரு உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.   இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் மோகன் அங்கனூர் கிராமத்துக்கு விரைந்து சென்றார். வாந்தி-மயக்கத்துக்கு காரணமான பிரசாதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior