உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா


காட்டுமன்னார்கோவில்:

   காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ், கியூமேக்ஸ் மேலாளர் கிருஷ்ணகுமார், சென்னை குரூப் ஆப் கம்பெனி டாக்டர் லதா பார்த்திபன் உட்பட பலர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். வினாடி வினாவில் பேராசிரியர் நக்கீரன் நடுவராக இருந்தார். மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


பண்ருட்டி :

    பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.


  கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினர். 
என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

வியாழன், மார்ச் 22, 2012

கடலூர் முதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா

முதுநகர் :
 
       கடலூர் முதுநகர் அருகே தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா நடந்தது.
 
        கடலூர், முதுநகர் அடுத்த மணக்குப்பத்தில் பி.ஏ.எஸ்.எப்., யு.என்.ஹாபிடாட் மற்றும் லியோனார்டு சேஷையர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த விழாவிற்கு பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத் தலைவர் பிரசாத் சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். யு.என்.ஹாபிடாட் அமைப்பின் மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் பூஷண் துலாதர், லியோனார்டு சேஷையர் மாற்றுத்திறன் அமைப்பின் மண்டல கவுன்சில் தலைவர் ஜான் ஆகியோர் பேசினார். விழாவில் டாக்டர் சேகர், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior