உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 07, 2012

மங்களூர் ஒன்றியத்தில் சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு


சிறுபாக்கம்:

     மங்களூர் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர் பிரபாகரன், உதவிக் கோட்டப் செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அடரி, பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், மா.கொத்தனூர், பாசார், வினாயகனந்தல், எஸ்.புதூர், வடபாதி, நரையூர், சிறுகரம்பலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தினர். தண்ணீர் வசதி, மின்மோட்டார் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பேசி தினசரி முறையாக பயன்படுத்தி பராமரிக்குமாறு அதன் சாவிகளை ஒப்படைத்தனர். பி.டி.ஓ.,சுந்தரம், பொறியாளர் மணிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.













Read more »

கடலூர் ஜெ.எஸ்.ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


கடலூர்:

      கடலூர் ஜெ.எஸ். ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜசேகர், இணைப் பேராசிரியர் நடராஜ் ஆகியோர் பேசினர். முனைவர் வையாபுரி ராஜா மற்றும் சிவக்குமார் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்.விழாவில் "ஆராய்ச்சி இதழ்' என்ற மலர் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவை பேராசிரியை செண்பக பிரியா தொகுத்து வழங்கினார். ராஜ் கவிதா நன்றி கூறினார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2-ல் நடைபெற்ற "ஆயுஷ் டே' விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மருத்துவ அறிவியல்துறைக்கு ஆற்றியை சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் வழங்கினார். விழாவில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், பதிவாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior