உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ரூ.60 லட்சத்தில் புதுப்​பிக்கும் பணி தொடக்​கம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​
கட​லூர் மாவட்​டம் காட்​டு​மன்​னார்​கோ​வில் அருகே கீழக்​க​டம்​பூ​ரில் உள்ள ருத்ர கோடீஸ்​வ​ரர் கோயில் சிதைந்த நிலை​யில் உள்​ளது. 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த இந்த கோயிலை மத்​திய அர​சின் தொல்​லி​யல்​துறை ஆய்வு செய்து ரூ.60 லட்​சம் செல​வில் ஆல​யத்தை புதுப்​பிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ஆலய புதுப்​பிக்​கும் பணியை கனி​மொழி எம்.பி., பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு ஆகி​யோர் சனிக்​கி​ழமை பார்​வை​யிட்​ட​னர்.​ ​ இந்த ஆல​யம் குறித்து தொல்​லி​யல்​துறை கல்​வெட்டு ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தது:​ இந்த கோயில் 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த ஆல​ய​மா​கும். இந்த கோயி​லில் தெற்கு வடக்​காக 4 அடி அக​லத்​துக்கு படி​க​ளு​டன் அமைந்​துள்ள சுரங்​கம் ஒன்று உள்​ளது. இச்​சு​ரங்​கத்​தின் மூலம் அரு​கில் உள்ள மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆலய பணிக்கு தொழி​லா​ளர்​கள் சென்​றி​ருக்​க​லாம் எனக்​கூ​றப்​ப​டு​கி​றது. ஆல​யத்தை சுற்றி சைவம் வளர்த்த பெரி​யோர்​க​ளின் 10க்கும் மேற்​பட்ட சிலை​கள் உள்​ளன. கரு​வ​றை​யின் பின் சூரி​யன் சிலை வடி​வில் காட்​சி​ய​ளிக்​கி​றார். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வர் ஆல​யத்​துக்​கான சிலை​கள் இங்கு செய்​யப்​பட்​டுள்​ளன. சிலை​க​ளைச் செய்​யும் போது அனைத்து சிலை​க​ளும் உடைந்​த​துள்​ளது. அந்த சிலை​கள் வெளிப் பிர​கா​ரத்​தில் தற்​போ​தும் உள்​ளன. திரு​ம​ணம் ஆகா​த​வர்​கள் இந்த கோயி​லுக்​குச் சென்று வழி​பட்​டால் திரு​ம​ணம் நடை​பெ​றும் என்​பது ஆல​யத்​தின் ஐதீ​க​மா​கும். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆல​யம் கட்​டு​வ​தற்கு வந்த சிற்​பி​கள் மற்​றும் தொழி​லா​ளர்​கள் வழி​ப​டு​வ​தற்​காக இந்த ஆல​யம் நிறு​வப்​பட்​டி​ருக்​க​லாம் என ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தார்.​ ​ சிறப்​பு​வாய்ந்த இந்த ஆல​யம் சித​ல​ம​டைந்​துள்​ள​தால் தனி​யார் ஒப்​பந்​தக்​கா​ரர்​கள் மூலம் தொல்​லி​யல்​துறை ​ ரூ.60 லட்​சம் செல​வில் புதுப்​பிக்​கும் பணியை தொடங்​கி​யுள்​ளது. இந்த சீர​மைப்பு பணி முடி​வுற 6 மாதங்​கள் ஆகும் எனக் கூறப்​ப​டு​கி​றது. ஆல​யத்​தின் அடித்​த​ளம் வரை அப்​பு​றப்​ப​டுத்​தப்​பட்டு மீண்​டும் அதே இடத்​தில் தொல்​லி​யல் துறை​யால் வழங்​கப்​பட்​டுள்ள மாதிரி வரை​ப​டத்​தைக் கொண்டு புதிய ஆல​யம் கட்​டப்​பட உள்​ளது என ஊராட்சி மன்​றத் தலை​வர் ஜோதி தெரி​வித்​தார்.

Read more »

ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​ட​வர் பிரச்னை வட்டாட்​சி​யர் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம்

சிதம்​ப​ரம்,​ நவ.22:

சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பம் ​ ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக வந்த புகா​ரின் பேரில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் சனிக்​கி​ழமை பஞ்​சா​யத்​தார் முன்​னி​லை​யில் அமை​திக் கூட்​டம் நடை​பெற்​றது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார். தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழ​கத்​தில் பொரு​ளா​தா​ரத் துறை​யில் விரி​வு​ரை​யா​ள​ராக உள்​ளார். ​ இவர் கொடிப்​பள்​ளம் அருகே உள்ள பின்​னத்​தூர் மேற்கு கிரா​மத்​தைச் சேர்ந்த ஒளி​மு​க​மது என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்​த​கைக்கு எடுத்து பயி​ரிட்டு வந்​துள்​ளார். அந்த நிலத்தை ஆதி​தி​ரா​வி​டர்​க​ளுக்கு பட்டா வழங்​கு​வ​தற்​காக ஆதி​தி​ரா​விட நலத்​துறை மூலம் கிரா​மப் பஞ்​சா​யத்​தார் நட​வ​டிக்கை மேற்​கொண்​ட​னர். இத​னி​டையே ஒளி​மு​க​மது நிலத்தை விற்​பனை செய்ய முன்​வந்த போது அந்த நிலத்தை சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்​ளார். இந்​நி​லை​யில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்த சிலர் ஊர் மக்​க​ளுக்கு வீட்டு மனைப்​பட்டா வழங்க வேண்​டும் என்​ப​தற்​காக அந்த நிலத்​தைத் தரு​மாறு கேட்​ட​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​தால் கிராம பஞ்​சா​யத்​துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் எனக்​கோ​ரி​னர். அதற்​கும் சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது குறித்து சர​வ​ணக் குமார் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​துள்​ளார். அதில்அவர் தெரி​வித்​துள்​ள​தா​வது:​ "17-11-09ல் ஊர்​பஞ்​சா​யத்​தைக் கூட்டி அந்த நிலத்​தில் நான் பயி​ரி​டக்​கூ​டாது,​ எனது வீட்​டுக்கு யாரும் செல்​லக்​கூ​டாது,​ எனக்கு கடை​க​ளில் மளிகை சாமான் கொடுக்​கக்​கூ​டாது,​ என்​னு​டன் யாரும் உறவு வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது என்று தெரி​வித்​த​தோடு மீறி தொடர்பு கொண்​டால் ரூ.5 ஆயி​ரம் அப​ரா​தம் போட்​டுள்​ள​னர். இத​னால் தனி​ம​னித உரிமை பாதிக்​கப்​பட்டு நான் மிகுந்த மன உளச்​ச​லுக்கு ஆளா​கி​யுள்​ளேன்' என்று ​ கிள்ளை காவல் நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை புகார் அளித்​துள்​ளார். கிள்ளை போலீ​ஸôர் புகா​ரைப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.​ ​ மேலும் இது​கு​றித்து சென்னை மனித உரிமை ஆணை​யம்,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர்,​ ஆதி​தி​ரா​விட நலத்​துறை செய​லா​ளர் ஆகி​யோ​ருக்கு கடி​தம் அனுப்​பி​யுள்​ள​தாக சர​வ​ணக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் கிராம பஞ்​சா​யத்​தார் மற்​றும் சர​வ​ணக்​கு​மார்,​ கிள்ளை சப்-​இன்ஸ்​பெக்​டர் அஸ்​கர்அலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர். கட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் வீட்​டு​ம​னைப்​பட்டா வழங்க சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்ள நிலம் தேர்​வு​செய்ப்​பட்டு அரசு பரிந்​து​ரைக்கு சென்​றுள்​ளது. நில​ஆர்​ஜி​தம் செய்ய அர​சாணை வரும் வரை சர​வ​ணக்​கு​மார் நிலத்​தில் பயி​ரி​டு​வதை யாரும் தடுக்​கக்​கூ​டாது. அப்​படி தடுத்​தால் தடுப்​ப​வர்​கள் மீது கிரி​மி​னல் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். மேலும் நில​ஆர்​ஜி​தம் செய்​வ​தற்​கான முயற்​சி​களை ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் விரைந்து முடிப்​பது என தீர்​மா​னிக்​கப்​பட்​டது.

Read more »

மசூதி நிலத்​தில் ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு

பண் ​ருட்டி,​ நவ. 22: ​

மசூதி நிர்​வா​கத்​தால் குத்​தகை விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கைய​கப்​ப​டுத்தி வேலி அமைத்​தி​ருந்த நிலத்​தின் வேலியை அகற்றி குத்​தகை விவ​சா​யி​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை ஏர் ஓட்​டி​ய​தால் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ ​ பண்​ருட்டி வட்​டம் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் மசூ​திக்கு சொந்​த​மான சுமார் 100 ஏக்​கர் நிலம் உள்​ளது. இந்த நிலத்​தில் அக்​கி​ரா​மத்தை சேர்ந்த குத்​தகை விவ​சா​யி​கள் பலர் கடந்த மூன்று தலை​மு​றை​யாக விவ​சா​யம் செய்து வரு​கின்​ற​னர். இந்​நி​லை​யில் ​ சிதம்​ப​ரத்​தைச் சேர்ந்த மீர்​அ​மீது,​ அமீர்​பாஷா ஆகி​யோர் மசூதி பரா​ம​ரிப்பு நிலத்தை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்டு கடந்த சில வாரங்​க​ளுக்கு முன் போலீஸ் உத​வி​யு​டன் நிலத்​தைச் சுற்றி கம்பி வேலி அமைத்​த​னர். இந்​நி​லை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை 20க்கும் மேற்​பட்ட குத்​தகை விவ​சா​யி​கள் கம்பி வேலியை அகற்றி ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. தக​வல் அறிந்த காடாம்பு​லி​யூர் சப்-​இன்ஸ்​பெக்​டர் சுப்​பையா உள்​ளிட்ட போலீ​ஸôர் சம்​பவ இடத்​துக்​குச் சென்று குத்​தகை விவ​சா​யி​களை கலைந்து போக செய்​த​னர்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior