உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குருபெயர்ச்சி மகா யாகம்


சிதம்பரம் :

              குருபெயர்ச்சியையொட்டி சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா யாகம் நடந்தது.
 
                குருபெயர்ச்சியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், இளமையாக்கினார் கோவில், அனந்தீஸ்வரன் கோவில் களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிதம்பரம் மேல வீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வேத பாஸ்கர மகாயக்ஞ மண்டலி சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி பகல் 10.30மணிக்கு மகா சங்கல்பம் நடந்தது. மாலை 6மணிக்கு தேவாரம் திருவாசகம், 7மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, நவக்கிரக குருமந்திர ஜபம், இரவு மகா நிவேதனம், தீபாராதனை நடந்தது.நேற்று காலை குருமந்திர ஜப பாராயணம், திருமுறை பாராயணம், குருமந்திர மகாயாகம், ருத்ர ஹோமம், வசோத் தாரா ஹோமம், மகா பூர்ணாஹீதியும் 12மணிக்கு தீபாராதனையும் நடந்தது. வேம்பு தீட்சிதர் தலைமையில் சம்பந்த தீட்சிதர் உள்ளிட்ட குழுவினர் யாகம் நடத்தினர்.

Read more »

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் திட்டக்குடியில் இணை ஆணையர் திருமகள் பேட்டி

திட்டக்குடி :

                         திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக இணை ஆணையர் திருமகள் கூறினார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் கோவில்களை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் திருமகள் நேற்று ஆய்வு மேற் கொண்டார். திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி, திருக்குளம் ஆக்கிரமிப்பு உட்பட கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு,

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

                      திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, மோதல் ஏற்படுவதை போலீசார் தவிர்த்துள்ளனர். திருக் குளத்தை சுத்தம் செய்தது தவறில்லை. உரிய போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய கோவில் செயல் அலுவலரிடம் கூறியுள்ளேன். திருக்குளம் சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் ஆக்கிரமிப்புகளை பொதுமக்களாக அகற்ற நினைப்பது தவறு. திட்டக்குடி நானூற்றொருவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக கணக்கெடுக்க செயல் அலுவலருக்கு பரிந் துரை செய்துள்ளேன்.

                      வழக்குகள் நிலுவையிலுள்ள பகுதி, கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என கூறினார். தொடர்ந்து திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் பணிகளை பார்வையிட்டார். மேலும் இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம்தீர்த்தபுரீஸ்வரர், பெண்ணாடம் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி ஆணையர் ஜெகநாதன், விருத்தாசலம் ஆய்வாளர் தேவராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

விருத்தாசலம் :

                 விருத்தாசலம் பாத்திமா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.
               
              விருத்தாசலம் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. டி.இ.ஓ., குருநாதன் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பா ளர் இளங்கோவன் முன் னிலை வகித்தார். பயிற்சியில் 9, 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்கள் 48 பேருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் குமார் பயிற்சி அளித் தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior