உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 05, 2010

தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபர் கைது

சிதம்பரம் :

                 சிதம்பரத்தில் தாய், மகனை கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் வண்டிகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வி (50). பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அம்பேத்கார் தெருவை சேர்ந்த தங்கமகன் (27), செல்வியின் பூக்கடை முன்பு நின்றுகொண்டு ஆபாசமாக திட்டினார். அதனை தட்டிக்கேட்ட செல்வி மற்றும் அவரது மகன் சுரேஷ் (25) இருவரையும் கத்தியால் கிழித்தார். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து தங்கமகனை கைது செய்தனர்.

Read more »

வலிப்பு நோயால் இறந்தவர் யார்?

கடலூர் :

                  கடலூரில் வலிப்பு நோயால் இறந்த அடையாளம் தெரியாதவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

               கடலூர் அண்ணாபாலத்தில் கடந்த 2ம் தேதி ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு இறந் தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அம்மை போட்ட முகமும், வெள்ளை அரைக்கை சட் டையும், நீல நிற கட்டம் போட்ட கைலியும் கட்டியிருந்தார். வலது கால் முட்டியின் கீழ் காய வடு உள்ளது. இறந்தவரின் உடல் கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

ஸ்ரீமுஷ்ணம் :

                      ஸ்ரீமுஷ்ணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

                   ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் கடைவீதியில் ராஜேந்திரன் (42) என்பவரது வீடும், கடையும் உள்ளது. நேற்று காலை ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரையில் தீப்பிடித்து தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த சாமான்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் இருந்த புதிதாக துவங்க இருந்து ஆப்செட் பிரஸ் மிஷின் மற்றும் டீக்கடையில் இருந்த சாமான்கள் உள்பட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior