உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

அடிப்படை வசதிகள் செய்து தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு : சிறுபாக்கத்தில் அரசு இலவசங்கள் கிடைக்கவில்லை

சிறுபாக்கம் :

            சிறுபாக்கம் ஊராட்சியில் கட்டமைப்பு அடிப் படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருவதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

                     மங்களூர் ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், தொலைபேசி நிலையம், இளமின் பொறியாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, இரு தொடக்கப்பள்ளிகள்,  நர்சரி பள்ளிகள், ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, ஆர்.ஐ., அலுவலகம், கிளை நூலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

              குறுவட்டத்தை சேர்ந்த நாற்பது கிராம மக்கள், மாணவர்கள் தினசரி சிறுபாக்கத்திற்கு வந்து செல்கின்றனர். அண்மைக் காலமாக சிறுபாக்கம் ஊராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெறவில்லை. திட்டக்குடியிலிருந்து மங்களூர் மற்றும் ஒரங்கூர் வரை வந்து செல்லும் இரண்டு டவுன் பஸ்கள், கள்ளக்குறிச்சி- மாங்குளம், நரையூர் வந்து செல்லும் டவுன் பஸ்கள், விருத்தாசலம்- ரெட்டாக் குறிச்சி, பொயனப்பாடி வரை செல்லும் டவுன் பஸ்கள் என ஆறு பஸ்கள் இயங்கி வருகின்றன.

                 இவை அனைத்தும் அருகில் அமைந்துள்ள சிறுபாக்கம் வரை வந்து செல்வதில்லை. சிறுபாக்கம் பகுதியில் தொடர் மின்தட்டுப் பாடு, இயற்கை இடர்பாடுகளில் தொடர் மின்வெட்டு ஆகியவற்றை போக்கிட துணைமின் நிலையம் அமைப்பதற்கு போதிய இடத்தினை பார்வையிட்ட மின்துறை உயர் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கையின்றி கிடப்பில் போட்டுள்ளனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தும் தகுதியில் இருந்தும் டாக்டர்கள் வாரத்தில் சில நாட்களாக மட்டும் வரும் காரணத்தால் கிராமப்புற ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

                   சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப் பட்டு 15 ஆண்டுகளாகியும் மூன்று கிலோ மீட்டர் அருகிலுள்ள மங்களூர், ஒரங் கூர் கிராமங்கள் 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அரசு பள்ளிகளில் சுகாதார குடிநீர், கழிப்பிட வசதி இன்றி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். விவசாயிகள், கூலி தொழிலாளிகள் அதிகமாக காணப்படும் இப்பகுதியில் நீண்ட காலமாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படவில்லை.

              அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள், சோலீஸ்வரர் கோவில்கள் சீரமைப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன. சிறுபாக்கம் குறுவட்டத்தில் விவசாயிகள் பெருமளவு கறவை மாடுகளின் மூலம் பால்நிலையத்தில் பால் வழங்கி வருகின்றனர். நீண்ட காலமாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளான இலவச கலர் "டிவி', காஸ், 2 ஏக்கர் நிலம் உள்ளிட்ட அரசு உதவிகள் கிடைத்தபாடில்லை.

                     நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஒவ்வொரு ஊராட்சியிலும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மிகப்பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் நடைபெறவில்லை. இதுபோன்ற அடிப்படை திட் டங்கள், நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்கப் பெறாத காரணத்தால் கிராம மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் நியாயமான அடிப் படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண் டுமென இப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Read more »

இரு பிரிவினரிடையே மோதல் : அமைதிக்குழு கூட்டத்தில் தீர்வு

திட்டக்குடி :

                திட்டக்குடி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அமைதிக்குழு கூட்டத் தில் தீர்வு காணப்பட்டது.திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் காணும் பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது, இரு பிரிவினரிடையே  மோதல் ஏற்பட் டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இருதரப்பினரையும் சாமாதானம் செய்து வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பிரச்னை ஏற்பட்டதால் இரு தரப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

             இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் பதட்டம் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் தாலுகா அலுவலகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது.  தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், துணை தாசில்தார் பாலு, ஆர்.ஐ., ராமச்சந்திரன், வி.ஏ.ஓ., பன்னீர் செல்வம், வி.சி., நிர்வாகிகள் குணத்தொகையன், தமிழன்பன் உட்பட இரு பிரிவிலுள்ள முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் நடந்த சம்பவங்களை மறந்து மீண் டும் ஒற்றுமையுடன்  இருப்பதாக இரு பிரிவினரும் உறுதியளித்தனர்.

Read more »

ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு தீர்த்தவாரி: பல்லாயிரக்கணக்கா மக்கள் பங்கேற்பு

கடலூர் :

                     கடலூர் மற்றும் கண்டரக்கோட்டை பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் சாமிகளுக்கு நடந்த தீர்த்தவாரியை பல் லாயிரக்கணக்கான பக்தர் கள் தரிசனம் செய்தனர். பொங்கல் முடிந்த ஐந்தாம் நாள் ஆற்று திருவிழா நேற்று கடலூர் மற் றும் கண்டரக் கோட்டை பெண்ணையாறு மற்றும் பண்ருட்டி கெடிலம் ஆற் றில் கோலாகலமாக நடந் தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகள் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆற் றில் தீர்த்தவாரி நடத்தி தீபாராதனை நடத்தப்பட்டது.

                             கடலூர் பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரியில் புருகீஸ்பேட்டை சுப்ரமணியர், சாலைக் கரை முத்துமாரியம்மன், உச்சிமேடு ஏழைமுத்துமாரியம்மன், குண்டு உப்பலவாடி முத்துமாரியம்மன், தாழங்குடா மாரியம்மன், வரக்கால்பட்டு ஓடை மாரியம்மன், சின்ன கங்கணாங்குப்பம் மாரியம் மன், வில்வநகர் சுப்பரமணிய சாமி, கண்டக்காடு முத்துமாரியம்மன், நாணமேடு மாரியம்மன், பெரியக்காட்டுப்பாளையம் எல்லையம்மன், முத்துமாரியம்மன், புதுப்பாளையம் துர்கையம்மன், புதுச்சேரி மாநிலம் பெரிய கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் முத்துமாரியம்மன், பிள்ளையார்குப்பம் சுப்ரமணியர் சாமி, கிருமாம்பாக்கம் சோலைவாழி சாமி, நாகப்பனூர் முத்துமாரியம்மன், பெரிய ஆராய்ச் சிக்குப்பம் முத்துமாரியம் மன், கும்தாமேடு மாரியம்மன், கரிக்கன் நகர் முத்துமாரியம்மன் உட் பட 30க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து சாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த் தவாரியில் பங்கேற் றன.

பண்ருட்டி : 

                கண்டரக் கோட்டை  பெண்ணையாற்று திருவிழாவிற்கு பெரியகள்ளிப் பட்டு மாரியம்மன், ஏரிப் பாளையம் அரசியம்மன், கட்டமுத்துப்பாளையம் சுப்ரமணிய சுவாமி, மாரியம்மன், விநாயகர், எல்.என்.புரம் முத்துமாரியம்மன், தட்டாம்பாளையம் மாரியம்மன், ஆனாங் கூர் மாரியம்மன், சிறுவந் தாடு மாரியம்மன்  உள் ளிட்ட பல்வேறு கிராமங் களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நடந்த விழாவிற்கு பண்ருட்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

                   பல்வேறு கோவில்களில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சாமிகளுக்கு ஒரே நேரத்தில் நடந்த தீர்த்தவாரிகளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ராட்டினம் உள் ளிட்ட பொழுது போக்கு அம்சங் களும் இடம் பெற் றிருந்தன. சிறுவள்ளிக் கிழங்கு விற் பனை அமோகமாக நடந் தது.

                ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூரில் டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலும், கண்டரக்கோட்டையில் டி.எஸ். பி., சிராஜிதின் தலைமையிலும், பண்ருட்டி கெடிலம் ஆற்றில் இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 200க்கும் மேற் பட்ட போ லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, கண்டரக் கோட்டை பெண்ணையாறு, பண்ருட்டி பெண் ணையாறுகளுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. மக்கள் அவதி: நெல்லிக் குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றுத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.   ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. ஆற்றில் குடிநீர் வசதி இருக்குமென நம்பி வந்த மக்கள் ஏமாற்றம் அடைந் தனர். நகராட்சி நிர்வாகம் ஆற்றுக்கு வரும் வாகனங் கள் மற்றும் கடைகளில் கட்டணம் வசூல் செய்ய குத்தகை விட்டு பணம் பெறுகின்றனர். ஆற்றில் குடிநீர் வசதி செய்து தராததால் மக்கள் சிரமப் பட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior