உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நகராட்சி கடலூர் நகர மக்களை சிரமப்படுத்துவதில் போட்டா போட்டி!

கடலூர் :  

                   கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துச் செல்லும் நிலையில் பணி முடிந்த சாலைகளை கூட சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
 
                கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி 40 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப் பட்டது. இதில் 148.7 கி.மீட்டர் தூரத்தில் 5,412 "மேன்ஹோல்', 15 ஆயிரத்து 50 வீட்டு இணைப்புகள், கம்மியம் பேட்டை, வரதராஜன் நகர், சீனுவாசன் நகர், ராஜாம்பாள் நகர், மணவெளி, மோகினி பாலம் ஆகிய இடங்களில் துணை சுத்திகரிப்பு நிலையங்களும், தேவனாம்பட்டினத்தில் பிரதான சுத்திகரிப்பு  நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட் டது. 20 எம்.எம்., பைப்புகள் முதல் 700 எம்.எம்., பைப்புகள் வரை பயன்படுத்தப்படும் இத்திட்டத் தில் 3 அடி முதல் 18 முதல் 20 அடி ஆழம் வரை நகரின் பல்வேறு சாலைகளை தோண்டி பைப்புகள் புதைக்கப் பட்டு வருகிறது.
மூன்றாண்டு முழுமையாக முடிந்த நிலையில் இதுவரை 5,111 மேன் ஹோல்கள், 13 ஆயிரத்து 324  வீட்டு இணைப்புகளுடன் 126.78 கி.மீட்டர் தூரம் பைப்புகள் புதைத் துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது.  இதில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 12.07 கி.மீட்டர் தூரத்தில் 8.6 கி.மீட்டர் முடித்து விட்டதாகவும், அதில் 6.23 கி.மீட்டர் தூரத்தை முழுவதும் முடித்து நெடுஞ்சாலைத் துறை வசமும், 110 கி.மீட்டர் தூர நகராட்சி சாலையை முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் கூறுகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் இதுவரை 70 கி.மீட்டர் தூர சாலையைத்தான் ஒப்படைத்துள்ளனர்.  நாங்கள் 40 கி.மீட்டர் தூர சாலைகளை போட்டு விட்டோம் என்கின்றனர்.  இதில் யார் சொல் வது உண்மை? யார் பொய் சொல் கின்றனர் என தெரியவில்லை. இதற்கிடையே பொது நல இயக்கங்கள் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்ததையடுத்து 24ம் தேதி ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நெடுஞ்சாலைத் துறையினர் அரசு மருத்துவமனை தேவி கருமாரியம்மன் கோவிலிலிருந்து செம்மண்டலம் வரையிலான  சாலையை சீரமைக்கும் பணி 25ம் தேதி துவக்குவது எனவும், கலெக்டர் அலுவலக சாலை, சப் ஜெயில் ரோடு மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலைகளில் "பேட்ச் ஒர்க்கை' குடிநீர் வடிகால் வாரியம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மறுநாள் ஒப்புக்காக குடிநீர் வடிகால் வாரியம், கலெக்டர் அலுவலக சாலை மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலையில் "பேட்ச் ஒர்க்' பணிகள் துவங்கியது.  ஆனால் மறுநாள் முதல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள் ளது. அதேப்போன்று நெல் லிக்குப்பம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை பணியை துவங்கவே இல்லை.  எது எப்படியிருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட் டம் என கிளம்பும் பொது நல அமைப்புகளுக்கு நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் "பெப்பே' காட்டுவதையே வாடிக்கையாக கொண் டுள்ளனர்.

Read more »

தொடரும் மோட்டார் ஒயர் திருட்டு : தண்ணீரின்றி விவசாயிகள் கடும் அவதி

திட்டக்குடி : 

             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கத்தில் தண் ணீரில்லாத நிலையில் மின்மோட்டார் காப்பர் ஒயர்களும் திருடப்படுவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
 
             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கம் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வெலிங் டன் நீர்த் தேக்கத்தில் நீர்ப்பிடிப்பு நிறுத்தப் பட்டு, கரை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின் றன. எனவே விவசாய பணிகளுக்காக உடனே மின்இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெண்ணாடம் பகுதியிலுள்ள வயல்வெளிகளில் பாசனத்திற்காக பயன்பட்டு வரும் மின்மோட்டார் மற்றும் நீர்மூழ்கி மோட் டார்களில் மின்ஒயர்கள், காப்பர் ஒயர்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் ஒயர் மாற்ற முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பர் ஒயர் திருடும் ஆசாமிகளின் கைவரிசை மின்வாரியத் திடமும் தொடர்ந்தது. டிரான்ஸ்பார்மரை கொளுத்தி காப்பர் ஒயரினை திருட முயற்சித்த சம்பவம் நடந்தது. தொடர் திருட்டு சம்பவங்களால் மின்மோட் டார் ஒயர் திருட்டினை தவிர்க்க விவசாயிகள் இரவு நேரங்களில் வயல் களில் உறங்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். தொடர்ச்சியாக மின் மோட்டார் ஒயர் திருட் டில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் : 

             அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அருண்மொழித்தேவனுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
            சிதம்பரம் எம்.எல்.ஏ வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான அருண் மொழித்தேவன், சிதம்பரம் நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் மீண்டும் அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டனர். 

                        அவர்களுக்கு சிதம்பரம் வண்டிகேட்டில் வரவேற்பு அளிக்கப்பட் டது. அங்குள்ள எம்.ஜி. ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வடக்கு மெயின் ரோடு, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஊர்வலம் சென்று கட்சி அலுவலகத்தில் முடிந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், சிதம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர் சுரேஷ்பாபு, செயலாளர் அருள், குமராட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஊராட்சி தலைவர் கணேசன், நகர துணைச் செயலாளர் சண்முகம், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி ராபர்ட், அவைத்தலைவர் ஏசுராஜ், இளைஞர் பாசறை நகர செயலாளர் பிரகாஷ், ஜெயவேல், சிவராம தீட்சிதர், சுப்ரமணியன், மருதவாணன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior