உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

இயற்கை உரத்திற்காக இடம் மாறும் கால்நடைகள்

சிறுபாக்கம் : 

              சிறுபாக்கம் அருகே இயற்கை உரத்திற்காக ஆடு, மாடு மந்தைகளை விளைநிலத்தில் பட்டி போட பணம் கொடுத்து விவசாயிகள் அனுமதிக்கின்றனர்.

              சிறுபாக்கம் அடுத்த மங் களூர், மலையனூர், பனையாந்தூர், ஒரங்கூர் மற்றும் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர், நல்லூர், அரியநாச்சி, கழுதூர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாய தொழிலையே பிரதானமாக செய்து வருகிறனர்.சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய் துள்ள மணிலா, பருத்தி, நெல், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.அறுவடைக்கு பின் காலியான நிலங்களில் பக்க விளைவுகள் இல் லாத தரமான இயற்கை உரத்தினை இடுவதன் மூலம் விளைபொருட்கள் நல்ல மகசூல் கிடைக்கும். இதற்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு மற்றும் மாடு மந்தைகள் இப்பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இவர்களிடம் நாள் ஒன்றுக்கு ஆட்டு மந்தைக்கு 400 ரூபாயும், மாட்டு மந்தைக்கு 600 ரூபாய் என விலை நிர்ணயிக்கின்றனர்.இதனையடுத்து வியாபாரிகள் குடும்பத்துடன் தற்காலிக குடில் அமைத்து விவசாயிகளின் விளைநிலங்களில் ஆடு, மாடு மந்தை பட்டி அமைத்து இயற்கை உரத்திற்கு வழி செய்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி பகுதியில் பயிரடப்பட் டுள்ள பயிர் மற்றும் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். பண்ருட்டி வேளாண் வட்டார பகுதியான வையாபுரிபட்டினம், கட்டியம்பாளையம் கிராமங்களில் பயிரிட்டுள்ள விளை நிலங்களை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். அப்போது பயிறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய உளுந்து, துவரை பயிரை தனிப் பயிராகவும், கரும்பு, சவுக்கு, மணிலா, மரவள்ளி பயிரில் ஊடுபயிராகவும் பயிரிட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.வையாபுரிபட்டினத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விதைப்பு செய்த தனிப்பயிர் உளுந்து விதைப் பண்ணைகளையும், கட்டியம்பாளையம் கிராமத்தில் ஐசோபாம் எண்ணெய் பனை பெருக்கு திட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பனை தோப்புகள், கரும்பில் ஊடுபயிராக விதைப்பு செய்த உளுந்து பயிரை ஆய்வு செய்தார்.இதில் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர்கள் பாபு, ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் ஹரிதாஸ், தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர்கள் விஷ்ணுராம்மேத்தி, மலர்வண் ணன், ரவிசேகர் உடனிருந்தனர்.

Read more »

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் : கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூர் : 

          கடலூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் துப் புரவு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையாங்குப்பம் எருக்கிடங்கில் கொட்டப்படும். இதன் எடையை கணக் கிட்டு பணம் வழங்கப் பட்டு வந்தது. தற்போது துப்புரவு பணிக்கு தனியார் எவரும் வராததால் நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை லாரியில் ஏற்றி பச்சையாங்குப் பம் எருக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பாலத் தின் அருகில் கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதில் மார்க் கெட் மற்றும் ஓட்டல் கழிவுகளையும் இங்கேயே கொட்டுவதால் காய்கறி, இலைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.  இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளின் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் அண்ணாபாலம் அருகே ஜவான்ஸ் பவன் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து பரவும் கொசு உள்ளிட்ட கிருமிகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து நீடித்து வருகிறது.
                நகரின் சுகாதாரத்தை காத்திட வேண்டிய நகராட்சி நிர்வாகமே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் ஆற்றில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவது வேதனையளிக்கிறது. இனியேனும் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior