உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது! ஆக்கிரமிப்புகள் அகற்றியும் பயனில்லை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் பெருகி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இடிக்கப்பட்ட சிமென்ட் கட்டைகளை அகற்றாமல் சாலையிலேயே குவித்து வைத்திருப்பதால் போக் குவரத்து நெரிசல் நீடித்து வருவதோடு, மீண்டும் சாலைகள் மெல்ல, மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வருகிறது.
 
                     விருத்தாசலம் நகரின் முக்கிய வீதிகளான ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, கடைவீதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் உள்ளன. நகரம் மற்றும் சுற்றியுள்ள 100 ம் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் விருத்தாசலத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலைகளில் மக்கள் கூட் டம் நிறைந்தே காணப்படும்.
 
                 இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகள் பொதுமக்கள் நிழலில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக கடைகளின் முன் முதலில் "ஷெட்' அமைத் தும், பின்னர் சிமன்ட் தளம் அமைத்தும் சாலையை ஆக்கிரமித் தனர். கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை அந் தந்த கடைகளின் முன் நிறுத்திவிடுகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத் திவிட்டு செல்வதால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து பாதிப்பை சரி செய்திட பிரதான சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் நகர மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.
 
              அதன்படி இரண்டு வாரங்களுக்கு முன் நகராட்சி ஒத்துழைப்புடன் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.  கடைவீதியில் துவங்கி ஜங்ஷன்ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆறு நாட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு அமைத்திருந்த ஷெட் களை பெரும்பாலான வியாபாரிகள் அவர் களாகவே கழற்றி கொண்ட நிலையில், அவர்கள் அமைத்திருந்த சிமென்ட் கட்டைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளினர்.
 
               அவ்வாறு இடித்து தள்ளிய சிமென்ட் கட்டைகளை உடனடியாக அகற்றாமல், தங்கள் வேலை முடிந்தது என நெடுஞ்சாலை துறையினர் சென்றுவிட்டனர்.  நகராட்சியினரும் இது தங்கள் வேலை இல்லை என ஒதுங்கி கொண்டனர். பெரும்பாலான இடங்களில் இடிக் கப்பட்ட சிமென்ட் கட்டைகள், தோண்டப்பட்ட மண் சாலை ஓரத்தில் அப்படியே கிடக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
 
                இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு வாரத்திலேயே சில வியாபாரிகள் தற்போது மீண் டும் தங்கள் கடைகளுக்கு முன் தற்காலிக ஷெட் அமைக்க துவங்கி விட்டனர். அங்கொன்றும் இங் கொன்றுமாய் தொடங்கி அனைத்து வியாபாரிகளும் விரைவில் தங்கள் கடைகளின் முன்பு தற்காலிகமாக தார்பாய் கொண்டு கொட்டகை  அமைத்து வருகின் றனர்.  சில மாதங்களில் அதை நிரந்தர ஷெட்டாக அமைத்து மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து விடுவர்.  எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பு பணியை சம்பிரதாய நடவடிக்கையாக மேற்கொள்ளாமல்  நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும்.
 
                    சாலையின் இருபுறங்களிலும் எல்லையை குறிப்பிட்டு வியாபாரிகள் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறும், பொதுமக்கள் பயனடையும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைக்க முன்வர வேண்டும்.  அதுபோல் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் மாசி மகத் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் : 

                  கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று நடந்த மாசி மக விழாவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உள்ளிட்ட  நூற் றுக்கு மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
                   கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று மாசி மகம்  திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், கடலூர் வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிகள், குணமங்கலம் மாரியம்மன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்ட  கோவில் களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மேளதாளம், பேண்டுவாத்தியம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவனாம்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பலர் கடலில் நீராடி இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். மாசி மக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  மாசி மகத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவனாம்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரி முடிந்த பின் திருக்கோவிலூர் உலகலந்த பெருமாள் நேற்று மதியம் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு பள்ளி வளாகத்தில் மண்டகபடியும், இரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

Read more »

விருத்தாசலம் அருகே அம்பேத்கர் சிலை பழைய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது

விருத்தாசலம் : 

              பழையப்பட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை,  ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மீண்டும் பழைய இடத்தில் அமைத்து கலெக்டர் தலைமையில் நேற்று திறக் கப்பட்டது.
 
                கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத் தில் நூலகம் அருகில் அனுமதியின்றி ஓராண் டிற்கு முன் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த இரு (ஆதிதிராவிடர்-முஸ்லீம்) சமுதாயத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெண் மணி தியாகிகள் தினத் தன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்னைக்குரிய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன் றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப் போது அதிகாரிகள் ஒரு மாதத்தில் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். அதன்பின் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என்றனர்.
 
                     சிலையை வேறு இடத் தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு தடை விதிக்க கோரி அதே ஊரைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் அமிர்தலிங்கம் சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கடந்த ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு திடீரென வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை வேறு இடத்தில் நிறுவினர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 11ம் தேதி அளித்த தீர்ப்பில் சிலையை மாற்றி அமைத் ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இம்மாத இறுதிக்குள் பழைய இடத்தில் மீண்டும் சிலையை நிறுவி கலெக்டர், எஸ்.பி., முன் னிலையில் திறப்பு விழா நடத்தவேண்டும் என தீர்ப்பளித்தனர். அதனையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம்  அம்பேத்கர் சிலையை பழைய இடத்திலேயே நிறுவினர். நேற்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் வாலிபர் சங்க மாநில செயலாளர் கண்ணன், துணை செயலாளர் வேல்முருகன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் தனசேகரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணன், வக்கீல் திருமூர்த்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  பின்னர் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியே சிலைக்கு மாலை அணிவித்தனர். சிலை திறப்பு விழாவையொட்டி பழையபட்டினம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior