உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்னா

கடலூர்:

                     தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) கடலூரில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம்  நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில், 240 நாள்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தும், பல ஆண்டுகளாக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் எம்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலர்கள் எம்.சந்திரன், ஜி.சுகுமாறன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சம்மோள துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் வாலண்டீனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் மாதவன், கடலூர் நகரச் செயலர் சுப்புராயன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கண்டன உரை நிகழ்த்தினர்.




Read more »

மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:

                  சிதம்பரம் தெற்குவீதி அலமேலு அஞ்சாபுலி வணிக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் கடலூர் நகர்மன்ற துணைத் தலைவர் பா.தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் ரமேஷ்நாதன், இரா.காவியச்செல்வன், ரவிச்சந்திரன், தமிழன்பன், ஜவகர் மற்றும் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read more »

எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது

நெய்வேலி:

                  பெற்றோர் தங்கள் முதுமைப் பருவத்தில், தங்களது குழந்தைகளின் தயவில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய அறிவியல் தினவிழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். இந்தியாவுக்கு முதல்முறையாக நோபல் பரிசு பெற்றுத்தந்துவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான சர்.சி.வி.ராமன், தனது கண்டுபிடிப்பான "ராமன் விளைவு' எனும் சூத்திரத்தை கண்டுபிடித்த தினமான பிப்ரவரி 28-ஐ நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

              இதையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கிப் பேசியது: ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் திறமைகள் உள்ளன. பெற்றோர் குழந்தைகளின் திறனை உணர்ந்து அதற்கேற்றார்போல் அவர்களது எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டுதல் வேண்டும் என்றார் அன்சாரி.÷முன்னதாக லிக்னைட் ஹாலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை என்எல்சி கல்வித்துறைச் செயலர் சுகுமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நெய்வேலி மையத்தின் செயலர் தாமோதரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் சிவக்குமார் நன்றி கூறினார். டாக்டர் பிரேம்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன், நெய்வேலி மையத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ராஜகோபால், ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior