உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி:
 
          பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 
               பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகளின் நலனை மேம்படுத்த அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. இதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெறவும், வியாபாரிகளை கூட்டி குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண்ருட்டி நகரில் உள்ள சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயப் பிரிவில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் கைத்தறி கண்காட்சி

சிதம்பரம்:

              சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் இந்தியன் கல்சுரல் கிராஃப்ட் சார்பில் அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வருகிற மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெய்ப்பூர் பட்டியாலா, அனார்கலி சுடிதார்கள், மதுரை சுங்குடி புடவைகள், மங்கல்கிரி போச்சம்பள்ளி, ஒரிசா பெங்கால் காட்டன் புடவைகள் ஜெய்ப்பூர் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஹைதராபாத் முத்து, பவளம், ராசிகற்கள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.கைத்தறி பொருள்களுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Read more »

மானியத்துடன் டிஏபி உரம் விற்பனை

சிதம்பரம்:

                பயறு வகைகளுக்கு டிஏபி உரம் தெளிக்க டிஏபி ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் ரூ.200 மானியத்தில் தில்லைவிடங்கள், கிள்ளை, பிச்சாவரம், பு.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார். 

ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் கூறியதாவது: 

                       பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நஞ்சை தரிசு உளுந்து மற்றும் பச்சைப்பயறு சில இடங்களில் பூக்கும் தருணத்தில் உள்ளது. பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கும், நல்ல திரட்டியான விதைகளைப் பெறவும், அதிக மகசூல் பெறவும் டிஏபி உரக் கரைசலை தெளிப்பது அவசியம். இந்த உரக் கரைசலை பயிர்களுக்கு பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 15 நாள்கள் கழித்து 2-வது முறையும்  இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு தெளிக்க 4 கிலோ டிஏபி தேவை. டிஏபி உரத்தை தெளிப்பதற்கு முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் நீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை வேளையில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior