உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு; ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி


                               ஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து தீப் பிழம்புகளை கக்கி வருவதோடு, அதிலிருந்து பீச்சியடிக்கப்படும் சாம்பல் வான் மண்டலம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து வந்து, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஐரோப்பிய பகுதியில் விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல் காட்விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம், அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. 
 
                    மேலும் புகை துகள்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1989-ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்தபோது அவ்வழியாக சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது. சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.இந்த எரிமலையை சுற்றி 3 லட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு அவர்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

இந்த ஆண்டில் 8,903 புதிய ஆசிரியர்கள் நியமனம்


 மிழகத்தில் 2010-2011 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் புதியதாக மொத்தம் 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேற்கண்ட பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதவிமூப்பின் அடிப்படையில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
 
                   2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் காலியாக உள்ள 8,903 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். 
 
புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் துவக்கம்: 
 
                    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாகத் துவக்கப்படும்.        புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் புதிதாக துவக்கப்படும்.  தற்போது அரியலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகமாகச் செயல்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் தொடக்கப்படும். தமிழ்நாடு கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சிக் கட்டடத்தில் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு கூடுதலாக ரூ.92 லட்சம் செலவில் இரண்டாவது தளம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

தமிழக அரசு புதிய திட்டம்: விண்ணப்பித்த 15 நாளில் ரேஷன் அட்டை


                  எந்தப் பொருளும் கோராமல், ரேஷன் அட்டை மட்டும் கேட்டு விண்ணப்பிப்போருக்கு 15 நாளில் அட்டை வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இந்த அட்டைகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: 
 
                    தமிழகத்தில் மக்கள் தெரிவிக்கும் விருப்பத்தின் அடிப்படையில் அரிசி பெறுவதற்கான ரேஷன் அட்டைகள், அரிசிக்குப் பதிலாக கூடுதல் சர்க்கரை பெறுவதற்கான அட்டைகள் போன்றவற்றுடன் எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வழங்குவதற்கு நீக்கல் அல்லது அட்டையில்லாத சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. விண்ணப்பித்த 60 நாள்களுக்குள் ரேஷன் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தப் பொருளும் வேண்டாதவர்கள்: ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையும் விரும்பாமல் அட்டை மட்டுமே வேண்டுமெனக் கூறி சிலர் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கான ஆதாரத்தை அளித்தால் அதன் அடிப்படையில் 15 நாளில் துரிதமாக விரைவு முறையில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். இதற்கென வடிவமைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அவர்கள் வசிக்கும் இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி ஆணையாளர் அலுவலகத்தில் மனுவினைக் கொடுக்க வேண்டும். அது, பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு ரேஷன் அட்டைகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரேஷன் அட்டைக்கான கணக்கெடுப்பு, ரேஷன் அட்டை அச்சடிப்பு, நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்தல், கிடங்குகளில் இருந்து பொருள்களின் நகர்வு, ரேஷன் கடைகளில் இருப்பின் அளவு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். இதற்கு வசதியாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ள அனைத்துத் துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை இணைத்து பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு முறை நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தில் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப நபர்களின் கைவிரல் ரேகை மற்றும் கண் விழித் திரை ஆகியவற்றை பதிவு செய்து அதன் அடிப்படையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன என்று தனது அறிவிப்பில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior